நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் குழு

சென்னை:

நேற்று நடைபெற்ற சட்டசபைக் கூட்டத்தொடரை கவர்னர் பன்வாரிலால் புரோஹித் துவக்கி வைத்து பேசினார்.

அவரது உரையில் தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்று இருந்தன. 

அதில் குறிப்பாக தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் உலகின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் பொருளாதார நிலையை மேம்படுத்த ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜான் த்ரே உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என தமிழ்நாடு ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அது குறித்து கவர்னர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையில் இருக்கிறது. தமிழக அரசிற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கிட 'முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு' ஒன்றை அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ரகுராம் ராஜன், ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர். அரவிந்த் சுப்ரமணியன், பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜான் த்ரே, முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளருமான டாக்டர் எஸ். நாராயண் ஆகிய உலகின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்கள் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

ரகுராம் ராஜன்

இந்தக் குழுவில் இடம்பெற்ற ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கின் முதன்மைப் பொருளாதார நிபுணராக இருந்தவர். பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுத்தவர். ஜி.எஸ்.டி. பணமதிப்பிழப்பு போன்றவை பொருளாதாரத்தின் வேகத்தை குறைந்துவிட்டதாக சாடியவர்.

அரவிந்த் நாராயணன் 

உலக வங்கி, உலக பொருளாகங்கள் பலவற்றில் உச்ச பதவிகளை வகித்து திறம்பட செயலாற்றியவர். அசோகா பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவர். 

எஸ்தர் டப்ளவ் 

மசூசெட்ஸ் தொழில்நுட்பக்கழகத்தில் பேராசிரியாக உள்ளார். வறுமை ஒழிப்பு குறித்து இந்தியா மட்டுமன்றி உலகமெங்கும் ஆய்வுகளை நடத்தியவர். 2019 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை கணவர் அபிஜித் பானர்ஜியுடன் இணைந்து பெற்றுள்ளார். ஏழை எளியவர்களின் வறுமையைப் போக்குவதற்கான ஆய்வுகளை முன்னிலைப்படுத்தியவர். பராக் ஒபாமாவின்கீழ் செயல்பட்ட உலகளாவிய பொருளாதார ஆணையத்தின் ஆலோசகராகவும் இருந்தவர். 

ஜீன் ட்ரீஸ்

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் இவர். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை கொண்டுவர காரணமாக இருந்தவர்.மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் பொருளாதார ஆய்வுக்குழு உறுப்பினராக இருந்தவர்.

எஸ். நாராயணன்

 ஐ.ஏ.எஸ். அதிகாரியான எஸ். நாராயணன் சென்னையைச் சேர்ந்தவர். 1965 முதல் 2005 வரை மாநில அளவிலும் மத்திய அரசிலும் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். நிதி, தொழில், வர்த்தகம், எரிபொருள், விவசாயம், சாலை வசதி என பல துறைகளில் தலைமை வகித்தவர். முன்னாள் பிரதமர் வாஜிபாய் காலத்தில் மத்திய அரசின் நிதி செயலாளராக இருந்தவர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகராக இருந்தவர். 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset