
செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று காலை டெல்லியில் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்
புது டெல்லி:
தலைநகர் சென்றுள்ள தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின், நேற்று பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை அளித்து பேசிய நிலையில், இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பிரதமரை சந்திக்கச் செல்லவில்லை, தொற்று குறைந்த நிலையில் பிரதமரை சந்திக்க அனுமதி கிடைத்ததால் முதன்முறையாக மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார்.
டெல்லியில் முதல்வரை டி.ஆர்.பாலு, கனிமொழி, டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். டெல்லி தமிழக இல்லத்தில் அவரைத் தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்ட தமிழகத்தின் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் கார்டு ஆஃப் ஹானர் எனப்படும் டெல்லி பட்டாலியன் போலீஸார் அரசு மரியாதை அளிக்கப்பட்டது.
நேற்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். பிரதமருடன் 25 நிமிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகம் சார்பில் 25 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் உறவுக்கு கைகொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்கிற அடிப்படையில் மத்திய அரசுடனான உறவு இருக்கும் என்று தெரிவித்தார். தாம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
இன்று காலை முதல்வர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது ராகுல் காந்தியும் உடன் இருந்தார். ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் சென்று சோனியாவையும் ராகுலையும் சந்தித்து நினைவுப் பரிசையும் வழங்கினார்.
இன்று அவர் தமிழகம் திரும்புவார் என்று தெரிகிறது.
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 9:28 pm
கவினும் நானும் உண்மையா காதலித்தோம்: காதலி சுபாஷினி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
July 31, 2025, 7:21 pm
பாஜகவுடனான உறவு முறிந்தது: ஓபிஎஸ் தரப்பு அறிவிப்பு
July 31, 2025, 8:48 am
613 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர்
July 28, 2025, 10:54 pm
திருச்சியில் கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் 30-ஆம் ஆண்டு சந்திப்பு
July 28, 2025, 10:10 am
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரசோழன் நினைவு நாணயத்தை இந்தியப் பிரதமர் மோடி வெளியிட்டார்
July 27, 2025, 8:43 am
பிரதமர் மோடி தமிழக வருகை: பாதுகாப்புக் காரணங்களுக்காக திருச்சியில் கடைகளை அடைக்க கெடுபிடி
July 26, 2025, 2:35 pm