
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாட்டிற்கு GST நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க பிரதமரிடம் வலியுறுத்து: பிரதமர் சந்திப்பிற்கு பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின்
புது டெல்லி:
பிரதமர் நரேந்திர மோடியுடனான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 25 நிமிட சந்திப்பு நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டு வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.
இதனையடுத்து, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், பிரதமருடனான சந்திப்பு மன நிறைவுடன் இருந்தது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக பிரதமர் உறுதி அளித்து இருக்கிறார்.
பிரதமரிடம் தமிழ் நாட்டிற்கு தேவையான சில முக்கியமான விஷயங்கள் குறித்து பேசி இருக்கிறோம் என்றார் மு.க. ஸ்டாலின்.
* 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும்
* ஜி.எஸ்.டி. வரியில் தமிழ்நாட்டுக்கான நிலுவைத் தொகையை உடனடியாக தர வேண்டும்.
* குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய பிரதமர் மோடியிடம் வலியுறுத்தினேன்.
* செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
* மேகதாது திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
* சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அங்கீகரிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
* மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
* நீட் உள்ளிட்ட அனைத்து நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய பிரதமரிடம் வலியுறுத்தி இருக்கிறேன்.
* நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.
* புதிய மின்சார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்.
* இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கவேண்டும் என வலியுறுத்தி உள்ளேன் என கூறினார்.
இவ்வாறு பத்திரிகையாளர்களிடம் ஸ்டாலின் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm