நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ணம்:  காலிறுதியில் பிரான்ஸ்

டோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு பிரான்ஸ் அணியினர் முன்னேறி உள்ளனர்.

கட்டாரில் நடந்த நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ், போலந்து அணிகள் மோதின. 

தொடக்கம் முதல் பிரான்ஸ் அணி சிறப்பாக ஆடியது. ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் ஒலிவியர் கிரவுட் ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். 

இதனால் முதல் பாதியில் அந்த அணி 1-0 என முன்னிலை வகித்தது.

இரண்டாவது பாதியின் 74ஆவது நிமிடத்திலும், 91ஆவது நிமிடத்திலும் பிரான்சின் கிளையன், எம்பாப்பே  தலா ஒரு கோல் அடித்தார். 

ஆட்டத்தின் கடைசி கட்டமான 99ஆவது நிமிடத்தில் போலந்தின் ராபர்ட் லெவண்டோவ்ஸ்கி ஒரு கோல் அடித்தார். 

இறுதியில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் போலந்தை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset