
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை:
தமிழகத்தில் இன்று தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் டிசம்பர் 5-ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வலுவடையக் கூடும்.
பிறகு மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 8-ஆம் தேதி வடதமிழகம் - புதுவை, மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் அருகில் நிலவக்கூடும்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (நவ.3) தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், வடக்கு உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
4-ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
February 2, 2023, 10:41 am
தமிழகத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க முடிவு
February 2, 2023, 10:30 am
தமிழ்நாட்டிற்குப் புதிய திட்டங்கள் எதையும் அளிக்காத ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
February 1, 2023, 1:13 pm
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா: உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
January 31, 2023, 6:20 pm
பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தட்டிக்கேட்ட தந்தை மீது வீடு புகுந்து தாக்குதல்
January 30, 2023, 1:50 pm
தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ்
January 29, 2023, 8:28 am
கமலின் மக்கள் நீதி மய்யத்தின் இணையதளம் ‘ஹேக்’ செய்யப்பட்டது: காவல்துறையில் புகார்
January 28, 2023, 9:49 pm