நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டி: போர்த்துக்கல்  அணியை வீழ்த்திய தென்கொரியா

டோஹா:

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் போர்த்துக்கல் அணியை வீழ்த்தி தென் கொரியா வெற்றி பெற்றது.

கத்தாரில் நடைபெற்ற எச் பிரிவு ஆட்டத்தில்  தென் கொரியா, போர்த்துக்கல் அணிகள் மோதின.

போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்தில் போர்த்துக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்தார். 

27ஆவது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்ததால் முதல் பாதி ஆட்ட முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன. 

2ஆவது பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்காத நிலையில் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 

இதில் 91வது நிமிடத்தில் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்த்துக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்றது. 

அடுத்த சுற்று ஆட்டத்திற்கு போர்த்துக்கல் அணி தகுதி பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset