நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஓவியர் இஸ்மாயில் அடித்து கொலை: 49 பேருக்கு அல்ஜீரியா நீதிமன்றம் மரண தண்டனை

அல்ஜீர்ஸ்: 

அல்ஜீரியா நாட்டின் அமைந்துள்ள பெர்பர் மலைப்பகுதியில் காட்டுத்தீயை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் ஓவியர் ஜமீல் பென் இஸ்மாயிலை அடித்துக் கொன்ற 49 பேருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்,  பெர்பர் மலைப்பகுதி சுற்றியுள்ள வனப்பகுதியில் காட்டுத்தீ மூண்டது. இதில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் உள்பட  90 பேர் பலியாகினர்.

இக் காட்டுத்தீயில் சிக்கியவர்களுக்கு உதவும் நோக்கில் 320 கி.மீ பயணித்து கடுமையான பாதிப்புக்குள்ளான லார்பாநாத் இராதேன் பகுதிக்கு வந்தடைந்தார் ஓவியர் பென் இஸ்மாயில்.  

அவர் அப் பகுதியைச் சாரதாவர் என்பதால் இஸ்மாயில்தான் தீ வைத்திருக்க கூடும் என்று எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் கிராமத்தினர் கடுமையாகத் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் விசாரித்தனர்.

டிரா எல் பெய்டா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்தப் படுகொலை வழக்கில் 49 பேருக்கு மரண தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 38 பேருக்கு 2 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அல்ஜீரியா நாட்டில் மரண தண்டனை நிறைவேற்ற தடை இருப்பதால் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆயுள் தண்டனை கைதியாக சிறையிலிருப்பார்கள்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset