
செய்திகள் மலேசியா
ஐக்கிய அரசாங்கத்தில் பிரதமர் பதவிக்கு அன்வார் இப்ராஹிம், துணைப்பிரதமராக டோக் மாட் ஆக வாய்ப்பு
கோலாலம்பூர்:
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இறுதியாக மலேசியாவின் பிரதமராகும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். அதே நேரத்தில் அம்னோவின் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசனும் ஒற்றுமை அரசாங்கத்தில் துணைப் பிரதமராகலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
புதிய அரசாங்கத்தை வழிநடத்த அன்வாரின் பக்காத்தான் ஹராப்பானை (பிஎச்) ஆதரிப்பதற்காக பாரிசான் நேசனல் (பிஎன்) உடன்படிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ள திட்டங்களில், அம்னோவுக்கு அந்த அமைச்சரவையில் பல முக்கிய துறைகள் தரப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
முன்மொழியப்பட்ட பெயர்களில் முஹம்மத் ஹசன் எனும் டோக் மாட் மட்டுமே துணைப் பிரதமராக இருப்பாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அகோங் ஒரு புதிய அரசாங்கத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றுநிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது சரவாக் மற்றும் சபா கட்சிகளும் முக்கியமான பதவிகளில் நியமிக்கப்படுவதைக் குறிக்கும்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தல் தொங்கு நாடாளுமன்றத்தில் முடிவடையாத நிலையில், பல திடீர் திருப்பங்களுடன் மலேசியா ஒரு புதிய அரசாங்கத்தைக் காணும் விளிம்பில் நிற்கிறது.
பெரிகத்தான் நேஷனல் தலைமையில் இல்லாத ஒரு ஐக்கிய அரசாங்கத்தை ஆதரிப்பதாக அம்னோ அறிவித்தது நேற்றிரவு ஒரு திருப்புமுனையை எட்டியது.
இன்று காலை, டிஏபியின் அந்தோணி லோக் மற்றும் லிம் குவான் எங் ஆகியோர் சரவாக்கின் சூத்திரதாரி டான்ஸ்ரீ அபாங் ஜோஹாரி, ஓபங் ஆகியோரிடம் முந்தைய அறிக்கைகளுக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோரினர்.
இந்த மன்னிப்பு சரவாக் கூட்டணியின் ஆதரவிற்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை, பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதின் அல்-முஸ்தபா பில்லாஹ் ஷா தனது சக ஆட்சியாளர்களை சந்தித்து அரசியல் முட்டுக்கட்டை குறித்து விளக்குவதற்காக ஆட்சியாளர்களின் சிறப்புக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். அனைத்து சுல்தான்களும் காலையில் அரண்மனையை வந்தடைந்தனர்.
எவ்வாறாயினும், அன்வாரின் PH அல்லது டான்ஸ்ரீ முஹையிதின் யாசினின் PN அவர்கள் நாடாளுமன்றத்தில் தாங்கள் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளனர் என்பதை நிரூபிக்க முடியவில்லை என்பது குறிப்பித்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 4:34 pm
பாஸ் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வமில்லை: அஹ்மத் சம்சூரி
July 9, 2025, 3:38 pm