நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

தனிநபர் டேட்டாவை பாதுகாக்காத நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி அபராதம்

புது டெல்லி:

தனிநபர் டேட்டா பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.500 கோடி வரை அபராதம் விதிக்க, அதுதொடர்பான மசோதாவை இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தனிநபர் டேட்டா பாதுகாப்பு மசோதாவில், தரவுப் பாதுகாப்பு சட்டப் பிரிவுகளை மீறும் நிறுவனங்களுக்கு, அவற்றின் உலகளாவிய விற்றுமுதலில் 4 சதவீதம் அல்லது ரூ.15 கோடி அபராதம் விதிக்கும் அம்சம் இடம்பெற்றது.

எனினும், அந்த மசோதாவை இந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது மத்திய அரசு திரும்பப் பெற்றது. அப்போது விரிவான சட்ட கட்டமைப்பில் பொருந்தும் வகையில், டேட்டா பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் வகுக்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

எந்தவொரு நிறுவனமும் தரவுப் பாதுகாப்பு சட்டத்தை மீறியிருப்பது தெரியவந்தால், அதுதொடர்பாக அந்த நிறுவனத்திடம் வாரியம் விசாரணை மேற்கொள்ளும்.

அந்த விசாரணையில் நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமாக இல்லாதபட்சத்தில், ரூ.500 கோடிக்கு மிகாமல் அபராதம் விதிக்க மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset