நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

மோடிக்கு சிறப்பான வரவேற்பு: கருப்பு குடைக்கு அனுமதி இல்லை  

மதுரை: 

பெங்களூருவில் இருந்து பிரதமர் மோடி நேற்று தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் அருகே அம்பாத்துரையில் உள்ள ஹெலிகாப்டர் தளத்துக்கு பிற்பகல் 3.45 மணிக்கு வந்தார்.

அங்கு முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் பிரதமரை வரவேற்றனர். தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகத்துக்கு பிரதமர் மோடி காரில் சென்றார்.

பிரதமர் மற்றும் முதல்வரை வரவேற்க காலை முதலே காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள சாலையில் திமுக, பாஜக தொண்டர்கள் பொதுமக்கள் குவிந்தனர். 

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் குடைபிடித்தபடி மேளதாளங்களுடன் பிரதமர், முதல்வரை வரவேற்றனர்.

பாதுகாப்பு கருதி தொண்டர்கள், பொதுமக்கள் மற்றும் அவர்களது உடமைகளை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதனை செய்தபின் போலீஸார் அனுமதித்தனர். 

அப்போது தீப்பெட்டி, தண்ணீர் பாட்டில், கருப்புக் குடைபோன்ற பொருட்களை எடுத்துச்செல்ல போலீஸார் அனுமதிக்கவில்லை.

மழைக்காலம் என்பதால் பலர் குடையுடன் வந்திருந்தார்கள். அதில் குறிப்பாக, கருப்பு குடை வைத்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset