
செய்திகள் இந்தியா
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு வாங்கினார் சசி தரூர்
புது டெல்லி:
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு படிவத்தை சசி தரூர் வாங்கினார்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்திருந்த நிலையில் சசி தரூரும் களமிறங்கவிருப்பது உறுதியாகியுள்ளது.
இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதன் மிஸ்திரியின் அலுவலகத்தில் சசி தரூர் சார்பில் அவரது நெருங்கிய உதவியாளர் ஆலிம் ஜவேரி சனிக்கிழமை வேட்புமனு படிவத்தைப் பெற்றார்.
வேட்புமனு தாக்கல் செய்ய மாநில கமிட்டி உறுப்பினர்கள் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், அவர்களது கையொப்பங்களைப் பெற்று, செப். 30இல் சசி தரூர் மனு தாக்கல் செய்வார் என்று கூறப்படுகிறது. வேட்புமனு தாக்கலுக்கு அன்றுதான் கடைசி நாளாகும்.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கெலாட், சசி தரூர் இடையே போட்டி உருவாகியுள்ள நிலையில், 20 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய போட்டியை கட்சி சந்திக்கவிருக்கிறது.
கட்சித் தலைவர் சோனியா காந்தியை சசி தரூர் கடந்த திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார்.
அப்போது, தலைவர் தேர்தலில் போட்டியிடும் தனது விருப்பத்தை சசி தரூர் தெரிவித்ததாகவும், இத் தேர்தலில் தான் நடுநிலை வகிக்க இருப்பதாக அவரிடம் சோனியா கூறியதாகவும் கட்சி வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அக்டோபர் 1இல் நடைபெறவுள்ளது. மனுவை திரும்பப் பெற அக்டோபர் 8 கடைசி நாள். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலையில் வெளியிடப்படும்.
அக்டோபர் 17இல் தேர்தல் நடத்தப்பட்டு, 19}ல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இதில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 9,000க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm