நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இராஜகிரி வெல்பேர் அசோசியேஷன் ஏற்பாட்டில் முப்பெரும் விழா: நலத்திட்டங்களை அமைச்சர் சரவணன் துவக்கி வைத்தார்

இராஜகிரி:

இராஜகிரி வெல்பேர் அசோசியேஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற முப்பெரும் விழாவில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன்  நலதிட்டங்கள் தொடக்கி வைத்தார்.

தஞ்சாவூர் அருகேயுள்ள இராஜகிரியில் இஸ்லாமிய நல சங்கம் சார்பில் மலேசியா அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் பாராட்டு விழா, இராஜகிரி சமூக மேம்பாட்டு அறக்கட்டளை துவக்க விழா, நலதிட்டமும் மாணாக்கருக்கு ஊக்க பரிசும் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனுக்குசிறப்பான வரவேற்பு நல்கப்பட்டது. இரு சக்கர வாகனங்களின் அணிவகுப்புடன் இராஜகிரி மக்கள் அவரை வரவேற்றனர். ஆளுயர மாலை மற்றும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். 

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன், தனது இந்த பயணம் இன மத மொழி ஆகியவற்றை கடந்த ஒரு ஒற்றுமை பயணம் என்றார். நீங்கள் காட்டும் அன்பும் பாசமும் அளவிடமுடியாதது என்று புகழ்த்துரைத்தார்.  

இராஜகிரி மண்ணை பூர்வீகமாக கொண்ட மலேசியா மனிதவள துறையின் மேம்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீது மிக திறமையானவர். ஒரு சிறந்த, உண்மையான, வேகமான  அதிகாரி. ஒரு அதிகாரி இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு அவர் ஓர் உதாரணம் என புகழ்ந்தார் அமைச்சர். 

மேலும், உலகம் முழுவதும் மனிதவள துறைக்கு போதாத காலம் என்றும், ஒரு தலைமுறை அழிய கூடிய நிலையில் இருக்கும் இந்த சூழலில் அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் முக்கிய பொறுப்பு மனிதவள துறைக்கு உள்ளது என்றார். 

May be an image of 6 people, people standing, indoor and text that says 'ழில்மிகு இராஜகிரியில் DS Indian Overseas Bank ORBEARER PAY Rajaghiri Social Development Trust RUPEES Ten Lakhs Only 10,00,000.00 10,00,000.00 05558 Signature 111111'

வெல்பேர் அறக்கட்டளை மூலம்  அமைச்சர் ஏழை எளியேருக்கு இலவசமாக தையல் இயந்திரங்கள் வழங்கினார்.  

இராஜகிரி மட்டுமல்லாமல் சுற்று வட்டார ஊர்களில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்க தொகையாக ரொக்கப் பரிசும்  அமைச்சர் சரவணன் வழங்கினார்.

மேலும் இராஜகிரி சமூக மேம்பாட்டு அறக்கட்டளையினை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்த அமைச்சர் சரவணன் முன்னிலையில் டத்தோ ஷாகுல் ஹமீது, டான் ஸ்ரீ ஹனிபா, டத்தோ அப்துல் மாலிக் ஆகியோர் தலா 10 லட்சம் ரூபாய்க்கான மாதிரி காசோலைகளை வழங்கினார். டத்தோ ஜமருள் கான், டத்தோ முஹம்மது மொஹ்சின், பெமினா அபு, முஹம்மது நாசர், முஹம்மது கஸாலி ஆகியோரும் நன்கொடை காசோலைகளை வழங்கினர். முதல் நாளிலேயே அறக்கட்டளைக்கு 55 லட்ச ரூபாய் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

May be an image of 9 people, people standing and indoor

May be an image of 7 people, people standing and indoor

No photo description available.

மேலும் நிகழ்ச்சியில் இராஜகிரி பகுதியை சேர்ந்த 10 பேருக்கு மலேசியாவில் இலவச கல்வி வழங்குவதாக மாஹ்ஸா மருத்துவ பல்கலைகழக நிறுவனர் வேந்தர் டான் ஸ்ரீ முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.கே என்றழைக்கப்படும் கல்யாண சுந்தரம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர்  அன்பழகன், பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

May be an image of 11 people, people standing and indoor

முன்னதாக முஸ்லிம் வெல்பேர் அசொசியஷன், நிறுவனர் ஹாஜி N.A.M. யூசுஃப் அலி B.A. அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். ஜனாப் டி.எம். முபாரக் ஹுசைன் நன்றி நவின்றார்.

நிகழ்ச்சியை கவிஞர் தஞ்சை இனியன் சுவைபட தொகுத்து வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset