நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

உயரிய தமிழ் திறனுக்காக டத்தோஸ்ரீ சரவணனுக்கு பைந்தமிழ் சுடர் விருது: கம்பம் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்பட்டது  

உத்தமபாளையம்:

கம்பம் பள்ளத்தாக்கில் மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணனை பாராட்டி நடத்தபட்ட முப்பெரும் விழாவில் "பைந்தமிழ்சுடர் " என்ற பட்டம் அமைச்சருக்கு வழங்கி அவரின் பெயரிலேயே ஒரு பள்ளி வளாகம் அமைப்பதற்கான இன்று அடிக்கல் நாட்டபட்டது.

இன்னும் 20 ஆண்டுகளில் 70 சதவிகித விளை நிலங்கள் காணாமல் போக போவதால் கால நிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயார்படுத்தி கொள்ளுமாறு அமைச்சர் சரவணன் அறிவுறுத்தினார்.

உத்தமபாளையம் வட்டாரத்தில் கம்பம் பகுதியில் அல் ஹிக்மா கல்வி அறக்கட்டளை சார்பில் மலேசியா மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணனுக்கு பட்டம் வழங்கும் விழா, பெண்களுக்கு பட்டமளிப்பு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடைபெற்றது. 

இதில் பங்கேற்க வந்த மலேசியா மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணனுக்கு பள்ளி மாணவ மாணவிகள் அணிவகுப்பு மரியாதை செலுத்தி தமிழர் கலையான சிலம்பாட்டம் ஆடியபடி உற்சாக வரவேற்பளித்தனர்.  

பின்னர் மாணவியர்கள் தங்குவதற்கான அல்ஹிக்மா மாஹ்ஸா மாணவியர் விடுதியினை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் மற்றும் மாஹ்ஸா மருத்துவ பல்கலைகழக நிறுவன வேந்தர் டான் ஸ்ரீ பேராசிரியர் முஹம்மது ஹனீஃபா ஆகியோர்  திறந்து வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து அமைச்சர் சரவணனை சிறப்பிக்கும் விதமாக  அவரின் பெயரிலேயே பைந்தமிழ்சுடர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் சி.பி.எஸ்.ஈ பள்ளி துவக்குவதற்கான அடிகல்லை  நாட்டி, அமைச்சர்  கல்வெட்டை திறந்துவைத்தார். 

அப்போது அங்கிருந்த மாணவ மாணவிகளுடன் உரையாடிய அமைச்சர் சரவணன் , கல்வி மட்டுமே ஒருவரை மேம்படுத்தும் என்பதால் அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதன்பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனின் தமிழ் ஆற்றல் மற்றும் சேவையை பாராட்டி அல்ஹிக்மா கல்வி அறகட்டளை நிறுவனர் சொல்லமுது பீர் முஹம்மது பாகவி  "பைந்தமிழ் சுடர்" என்ற பட்டத்தை அமைச்சர் சரவணனுக்கு வழங்கினார். அதற்கான பட்டம் பொருத்தப்பட்ட அங்கியை அணிவித்தார். தொடர்ந்து அமைச்சருக்கு கவிதை படித்தளித்து நினைவுப் பரிசு வழங்கினார். 

May be an image of 2 people, people standing and outdoors 

May be an image of 11 people and people standing

அல்ஹிக்மா கல்வி அறகட்டளை நிறுவனர் கம்பம் பீர் முஹம்மது பேசுகையில், "அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணனின் கம்பம் பள்ளதாக்கு வருகை இப் பகுதியில் தென்றல் வீசியதை போன்றது என்றும், அவரின் தமிழ் ஆற்றலையும் திறனையும் தமிழ்மீது அவரின் பற்றுதலையும் கண்டு அமைச்சர் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாகவும், உலகம் முழுவதும் அமைச்சர் சரவணனின் தமிழ் ஒலிப்பதாகவும் புகழாரம் அப்போது சூட்டினார். 

மேலும், அவரின் உயரிய தமிழ் திறனுக்காக இந்த பட்டம் வழங்கப்பட்டுள்ளதாகவும் இனி பொது அமைப்புகளும் இலக்கியவாதிகளும் இன்று உவந்தளிக்கப்பட்ட  பட்டப் பெயரான பைந்தமிழ்சுடர் டத்தோ ஸ்ரீ சரவணன் என்றே அழைக்கப்பட வேண்டும் என்றார்.

May be an image of 6 people, people sitting, people standing and outdoors

அவரை தொடர்ந்து  மாஹ்ஸா மருத்துவ பல்கலைகழக நிறுவன வேந்தர் டான் ஸ்ரீ முஹம்மது ஹனீஃபா பேசுகையில் , தமிழுக்கு பெருமை சேர்த்தவர் அமைச்சர் சரவணன், உலகத்தின் அனைத்து தமிழ் மேடைகளிலும் பேசியவர் என்றும் இவர் இல்லாமல் கண்ணதாசன் விழா நடக்காது என்றும் பாராட்டினார்.

மேலும் அறம் சார்ந்த வாழ்க்கையே நிலையான மகிழ்ச்சியை அளிக்கும் என்றும் அதற்கான வழிமுறைகளை முன்னோர்கள் வகுத்து வைத்திருப்பதாகவும் அதை பின்பற்றி அறத்துடன் வாழவேண்டும் என்றார். அதேபோல் இது போன்ற கல்வி நிறுவனத்தை நடத்தி மார்க்க போதனை மூலம் பீர் முஹம்மது, அறத்தை போதித்து வருகிறார் என்றார்.

அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற இஸ்லாமிய பெண் மார்க்க அறிஞர்களுக்கான எட்டாவது ஆலிமா பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் சரவணன், முன்னதாக இந்திய தேசியக்  கொடியேற்றி மறியாதை செலுத்தினார். பின்னர் கல்வி முடித்த இஸ்லாமிய பெண் மார்க்க அறிஞர்கள் 15 பேருக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

அப்போது சிறப்புரையாற்றிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன், தன் சமூகத்தின் உயர்வுக்காக உண்மையாக உழைப்பவரை தெய்வம் தாங்கி நிற்கும் என்றும், ஏழைக்கு எழுத்தறிவித்தல் தான் சிறந்த தர்மம் என்றார். அதேபோல் பெண்களுக்கு கல்வி அளித்து அவர்களை போற்ற கூடிய குடும்பங்கள் நன்றாக இருக்கும் என்றார்.

No photo description available.

மேலும், தொடர்ந்து பேசிய அமைச்சர், 
"மிக முக்கியமான கால கட்டத்தில் நாம் வாழ்வதாகவும், இன்னும் 20 ஆண்டுகளில் 70 சதவிகித விளை நிலங்கள் காணாமல் போகபோவதாகவும் தெரிவித்தார். மிக பெரிய விஞ்ஞான தொழில்நுட்ப மாற்றம் ஏற்படபோவதாகவும், அதிகளவில் ரோபாட்டுகள் பெரும்பாலான பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், காலநிலை மாற்றம் ஏற்பட்டு கலாச்சார சீர்கேடுகள் ஏற்படபோவதாகவும் , மஞ்சள் பூசும் பெண்களை காணப் போகும் கடைசி தலைமுறை இதுதான் என்றும் எச்சரித்த அவர் அதற்கேற்ப அனைவரும் அவற்றை எதிர்கொள்ள தயார்படுத்திக் கொள்ள வேண்டும்" என வலியிறுத்தினார்.   

மேலும் மலேசியாவில் வெற்றி பெற்ற இந்தியர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள் என்றும் அதற்கு முக்கிய காரணம் கடின உழைப்பும் அதிகாலையில் எழுவதும் என்றார் அவர். அதேபோல் அதிகாலை எழுபவர்கள் யாராக இருந்தாலும் வெற்றி பெறுவார்கள் என்றும் உயிரை விட ஒழுக்கம் முக்கியம் எனவும்  அறிவுருத்தினார்.

அல்ஹிக்மா கல்வி அறக்கட்டளை தலைவர் எஸ்.எம்.எஸ். ரஃபீக்தீன் டத்தோ சலாஹுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேராசிரியர் அப்துல் சமது வாழ்த்துரை வழங்கினார்.

மலேசியா மனிதவள மேம்பாட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி டத்தோ ஷாகுல் ஹமீது தாவுத்,  மலேசியா தொழிலதிபர் டத்தோ முஹம்மது மாலிக், மலேசியா இஸ்லாமிய இளைஞர் மன்ற நிறுவனர் முஹம்மது அஸ்ரின், அதன் தலைவர் அஸ்மி, விகாஸ் மலேசிய அனைத்துலகப் பள்ளி தலைவர் யூசுஃப், மிம்காய்ன் வர்த்தக சம்மேளனத் தலைவர் டத்தோ ஜமருல் கான உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளி தாளாளர் சைஃபுல் இஸ்லாம் அனைவரையும் வரவேற்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset