நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

கவிஞர் கண்ணதாசனின் ஆண் காதலி 

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே  தூங்கும்

வனக்கிளி அவளை இன்னும்  மறக்கவே முடிய வில்லை!

நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி  இன்று

எனக்கொரு கவிதையானாள் இதுதான் நான் கண்ட இன்பம் !”

கவிஞர் கண்ணதாசன்  அவர்கள்  இப்படி ஓர் அழகான கவிதை  வரிகளை யாரை குறித்து எழுதினார் தெரியுமா?

அவரே தொடர்கிறார் அக் கவிதையில்

“கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்!

மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள்!

பன்னி நான்  கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள்!

சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்!

இப்போது  கொஞ்சம் புரிந்திருக்கும்

அந்தக் கவிதை  மேலும் தொடர்கிறது இப்படி

“தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள், - மின்னும்

அந்திவான்  மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள்  - நானும்

பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன், - என்ன

மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்”

தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களை  பெண்ணாக பாவித்து தன்  காதலியாக உருவகித்து கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதை இது.

Why did Kannadhasan, the Tamil poet, condemn Karunanidhi in his book  Vanavaasam? - Quora

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset