
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழக அரசு ஹலால் சான்றிதழ் குறித்து தெளிவான முடிவு எடுக்க வேண்டும்: பிரிம் தலைவர் ஆரிஃப் அமைச்சர் ஆவடி நாசரிடம் கோரிக்கை
சென்னை:
சிறுபான்மை துறை, வக்ஃபு வாரிய அமைச்சர் ஆவடி நாசர் அவர்களை பேராக் முஸ்லிம் சங்கமான PRIM மாநிலத் தலைவர் முஹம்மது ஆரிஃப், மலக்கா முஸ்லிம் லீக் தலைவர் ஜஃபருல்லா ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த சந்திப்பின்போது முன்னாள் துணை நிதி அமைச்சரின் சிறப்பு அதிகாரி பெட்டாலிங் ஜெயா உமர் உடன் இருந்தார்.
இந்தியாவில் ஹலால் சான்றிதழ் தொடர்பாக அமைச்சருடன் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. தமிழகத்தில் வழங்கப்படும் HALAL உரிமம் அனைத்தும் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது இந்த HALAL உரிமம் வழங்குவதற்கு ஒன்றிய அரசோ, மாநில அரசோ முறையான எந்த ஒரு வழிகாட்டுதலும் இல்லை என்று அவரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
இத்தகைய HALAL உரிமங்களை பயன்படுத்தி உலகம் முழுவதும் HALAL முத்திரை இடப்பட்டு உணவு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மலேசியா நாட்டிற்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில் பயன்படுத்தும் HALAL முத்திரை அனைத்தும் சரியானபடியும் தகுந்த சோதனைகளுக்குப் பிறகும் தான் வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் மலேசியாவின் ஹலால் பொருட்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு உள்ளதை தகுந்த தரவுகளுடன் அமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தமிழகத்தில் தனியார் நிறுவனத்தால் வழங்கப்பட்ட HALAL சான்று என்பதால் மலேசியாவில் மலாய் மக்கள் தமிழ்நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் முத்தரையிட்டுள்ள HALAL மீது நம்பிக்கை இழந்து உள்ளார்கள் என்று அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தமிழகத்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு பொருட்களின் வணிகம் குறைந்துள்ளது இந்த நிலை தொடர்ந்தால் தமிழக அரசுக்கு ஏற்றுமதி வணிகத்திலிருந்து ஈட்டப்படும் பொருளாதாரம் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது என்று எடுத்துரைக்கப்பட்டது.
எனவே HALAL சான்றிதழை தமிழக அரசு முறையான வழிகாட்டுதலுடன் நம்பகத்தன்மையுடன் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சரிடம் பேராக் முஸ்லிம் சங்கம் PRIM சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கருத்தை தாம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக சிறுபான்மை துறை அமைச்சர் ஆவடி நாசர்உறுதியளித்தார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm
தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் கடிதம்
July 7, 2025, 10:22 pm
மாதம் ரூ.30,000: புதிதாக வேலையில் சேர்பவர்களுக்கான ஆரம்ப சம்பள பட்டியலில் சென்னை முதலிடம்
July 6, 2025, 2:03 pm