
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் இஸ்ரேலிய - சியோனிச திரைப்பட விழாவா?: எம் எச் ஜவாஹிருல்லா கடும் கண்டனம்
சென்னை:
பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் மனித இன பேரழிவு பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் பயங்கரவாத இஸ்ரேலின் கொடூர தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மனித இன பேரழிவு பயங்ரவாதமாக அது தொடர்கிறது. இந்த வாரம் மட்டும் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொன்றொழிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பல்லாயிரம் அப்பாவி மக்களின் உயிரைக் குடித்திட இஸ்ரேலின் டாங்கிகள் வெறிகொண்டு ஊடுருவிச் செல்கின்றன.. எவ்வித நிவாரண பொருட்களும் அங்கே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வாழ்வாதாரத்தை இழந்து கொடிய துயரத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நிராயுதபாணியான அந்த மக்கள் மீது இஸ்ரேல் ராணுவம் பயங்கர ஆயுதங்களால் கொடூரத் தாக்குதல்களை அன்றாட நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. காஸாவில் நிவாரண முகாம்களாக செயல்பட்ட கட்டடங்கள் உட்பட அனைத்து கட்டடங்களும் வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. பச்சிளம் பாலகர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். பெண்களும் முதியோர்களும் மிகக் கொடுமையான முறையில் கொன்றழிக்கப்படுகிறார்கள்.
இதை எத்தனைக் காலம் தான் உலகம் மௌன சாட்சியாய் பார்த்து நிற்கும்.
எந்த சட்டத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்படாத பயங்கரவாத இஸ்ரேலுக்கு எதிராக உலகம் ஓரணி திரண்டு ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது.
இச்சூழலில் இஸ்ரேலின் திரைப்பட விழா சென்னையில் நடைபெறும் என்ற தகவல் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது. இஸ்ரேலிய - சியோனிச கருத்துருவாக்கங்களை தாங்கி தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியில் மே 29 முதல் 31 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்ற இஸ்ரேலிய திரைப்பட விழாவை உடனே தமிழ்நாடு அரசு தடை செய்திட வேண்டும்.
இஸ்ரேலுடனான வர்த்த உடன்பாடுகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டுமென கோருகிறேன்.
காசாவில் பயங்கரவாத இஸ்ரேல் நடத்தி வருகின்ற மனித இனப் பேரழிவு பயங்கரவாதத்தை உடனே தடுத்து நிறுத்திட, பாலஸ்தீன மக்களுடைய மண்ணுரிமையையும் வாழ்வுரிமையையும் பாதுகாத்திட, நாளை (22.5.2025) வெள்ளிக்கிழமை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்த இருக்கின்றது.
இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கேற்று, காசாவில் துயருற்று வரும் மக்களுக்காக குரல் கொடுப்போம். அவர்கள் துயரங்களில் தமிழ்நாடும் பங்கேற்கிறது என்பதை பறைசாற்ற அனைவரும் திரண்டு வந்து அநீதிக்கு எதிராக அணிவகுப்போம் என்று பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
May 23, 2025, 10:12 am
மத மோதலை தூண்டும் பேச்சு: எச்.ராஜா மீது வழக்கு
May 21, 2025, 2:43 pm
இனி 5 போக்குவரத்து விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
May 20, 2025, 11:50 pm
கனமழையால் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு: மதுரையில் சோகம்
May 20, 2025, 12:45 pm
நடுவானில் மலேசிய பயணிக்கு திடீர் நெஞ்சு வலி: சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்
May 20, 2025, 11:54 am
சென்னையில் பரவலாக மழை: இதமான சூழலால் மக்கள் மகிழ்ச்சி
May 18, 2025, 10:54 am