நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வெள்ளி தொடங்கி ஐந்து நாள்கள் மலேசியா, சிங்கப்பூர் எல்லையை ஒரு மில்லியன் பேர் கடந்தனர்

கோலாலம்பூர்:

அனைத்துலக எல்லைகள் திறக்கப்பட்ட பிறகு, மலேசியா, சிங்கப்பூர் இடையே சென்று வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், நோன்புப் பெருநாளையொட்டி, இரு நாடுகளுக்கும் இடையே சற்றேறக்குரிய பத்து லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக தெரிய வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி இரு நாடுகளும் பரஸ்பர எல்லைப்பகுதிகளை திறந்துவிட்டன.

இதையடுத்து, தரை, வான் போக்குவரத்து மூலமாக ஏராளமானோர் பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இரு நாடுகளுக்கும் இடையே பேருந்து, டெக்சி சேவைகள் தொடங்கி உள்ளன. இதனால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை தொடர்ந்து விடுமுறை என்பதால் ஜோகூர் தரைப்பாலத்தில் போக்குவரத்து மிகுந்து காணப்பட்டது.

இந்த ஐந்து நாள்களில் மட்டும் சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு சற்றேறக்குரிய ஐந்து லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

அதேபோல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு 4.6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டதாக குடிநுழைவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலானோர் பேருந்து, சொந்த கார்கள், இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கணிசமானோர் டெக்சி சேவையைப் பயன்படுத்திக் கொண்டனர்.

அதிக எண்ணிக்கையிலானோர் எல்லைகளைக் கடந்துசென்ற போதிலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

+ - reset