நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிஎன்பி புதிய கட்டணத்தை அறிவிப்பதற்கு முன் பெட்ராவை கலந்தாலோசிக்கவில்லை: துணைப் பிரதமர்

கோலாலம்பூர்:

டிஎன்பி புதிய கட்டணத்தை அறிவிப்பதற்கு முன் பெட்ரா எனப்படும்  எரிசக்தி, நீர் மாற்ற அமைச்சை  கலந்தாலோசிக்கவில்லை.

துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசுப் இதனை கூறினார்.

தெனாகா நேஷனல் பெர்ஹாட் தீபகற்ப மலேசியாவில் அடுத்த ஜூலையில் தொடங்கும் மின் கட்டண உயர்வு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.

ஆனால் இந்த அறிவிப்புக்கு முன் டிஎன்பி எரிசக்தி, நீர் மாற்றம் அமைச்சிடம் குறிப்பிடவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை.

2025 ஜூலை 1 முதல் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் புதிய மின் கட்டண அட்டவணையை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து அமைச்சும் எரிசக்தி ஆணையமும் உரிய ஆய்வுகளில் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.

மின்சார கட்டண விவகாரத்தில் உள்நாட்டுப் பயனர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது.

இதனால் விதிக்கப்படும் மின்சாரக் கட்டணங்கள் போட்டித்தன்மையுடனும், மலிவு விலையுடனும் இருக்கும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset