நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலாக்காவில் பிரபல பேரங்காடியில் உள்ள நகைக் கடையில் கொள்ளை

மலாக்கா:

மலாக்காவில் பிரபல பேரங்காடியில் உள்ள நகைக் கடையில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இங்குள்ள பண்டார் ஹிலிரில் உள்ள பிரபல பேரங்காடியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மாலை 3.30 மணியளவில் கட்டிடத்தின் கீழ் தளத்தில் முகமூடி அணிந்த இருவர் நுழைவதைக் காட்டும் சம்பவம் நடந்தது.

இந்த சம்பவம் அடங்கிய காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு நிமிடம் மற்றும் 21 வினாடிகள் வரை நீடிக்கும் அந்த வீடியோவில், 

இரண்டு பெண் ஊழியர்கள்  இருந்த கடைக்குள் தொப்பிகள், கருப்பு ஜாக்கெட்டுகள், முகமூடிகள் அணிந்த இரண்டு ஆடவர்கள் நுழைவதைக் காட்டுகிறது.

சந்தேக நபர் தொழிலாளர்களை பயமுறுத்துவதற்காக கூர்மையான ஆயுதத்தைக் காட்டி நகைகளை அவர்களிடம் ஒப்படைக்கச் சொன்னதாக நம்பப்படுகிறது.

ஆனால் இரண்டு தொழிலாளர்களும் பயத்தில் முன்னும் பின்னுமாக நடப்பதை அவ்வீடியோவில் காணப்பட்டது.

சில வினாடிகளுக்குப் பிறகு, சந்தேக நபர்கள் நகைகளை எடுத்ததுடன் வளாகத்தை விட்டு தப்பியோடினர்.

மத்திய மலாக்கா மாவட்ட போலிஸ் தலைமை உதவி ஆணையர் கிறிஸ்டோபர் பாடிட் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset