நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அந்நிய தொழிலாளர்களுக்கு 313,014 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன: டத்தோஸ்ரீ எம். சரவணன் 

கோலாலம்பூர்:

அந்நிய தொழிலாளர்களக்காக 313,014 விண்ணப்பங்களை மனிதவள அமைச்சு பெற்றுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

அனைத்து தொழில் துறைக்கான அந்நிய தொழிலாளர்கள் விண்ணப்பங்கள் கடந்த மாதம் மனிதவள அமைச்சு பெறத் தொடங்கியது.

மார்ச் 16ஆம் தேதி வரை கிட்டத்தட்ட 313,014 விண்ணப்பங்களை மனிதவள அமைச்சு பெற்றுள்ளது.

தொழிற்சாலைகளுக்கு மட்டும் 198,346 விண்ணப்பங்களை அமைச்சு பெற்றுள்ளது.

சேவைத்துறைக்கு 48,119, தோட்ட தொழில் துறைக்கு 36,950, கட்டுமானத்திற்கு 27,331, விவசாயத்துறைக்கு 7,248, ஈயம் - குவாரிகளுக்கு 20 விண்ணப்பங்களும் கிடைத்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை அடிப்படையில் தொழிலாளர்கள் பெறுவதற்கான அனுமதியும் கட்டங்கட்டமாக வழங்கப்பட்டு வருகிறது.

தொழிலாளர்களுக்கான நேர்முக தேர்வுக்கு வரும் நிறுவனங்கள் போதுமான ஆவணங்கள் இல்லாததால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

குறிப்பாக, தொழிலாளர்களுக்கான சேமநிதி வாரியத்தின் கணக்கறிக்கையை காட்டாததால் கூட விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஆகவே, அந்நிய தொழிலாளர்களுக்கான விண்ணப்பம் செய்யும் நிறுவனங்கள் முறையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset