நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நார்வேவில் சுற்றுலா பேருந்து விபத்தில் 4 மலேசியர்கள் காயமடைந்தனர்: விஸ்மா புத்ரா

புத்ராஜெயா:

நார்வேவில்  சுற்றுலா பேருந்து ஏரியில் மோதியதில் 4 மலேசியர்கள் காயமடைந்தனர்.

விஸ்மா புத்ரா எனப்படும் வெளியுறவு அமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதை உறுதிப்படுத்தியது.

கடந்த வியாழன் அன்று நார்வேயில் உள்ள அஸ்வத்நெட் ஏரிக்கு அருகே சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தில் நான்கு மலேசியர்கள் காயமடைந்தனர். இந்த நான்கு நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டது.

அவர்கள் லோஃபோடனில் உள்ள தோன் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஸ்டாக்ஹோமில் உள்ள மலேசியத் தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம் இப்போது விபத்து தொடர்பான அனைத்து முன்னேற்றங்களையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று விஸ்மா புத்ரா கூறியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset