நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈப்போவில் 46 பள்ளி மாணவர்கள் இன்ஃபுளூன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

இங்குள்ள தங்குமிட இடைநிலைப் பள்ளியில் கண்டறியப்பட்ட இன்ஃபுளூன்ஸா ஏ கொத்துத் தொற்று சம்பவத்தைத் தொடர்ந்து, மொத்தம் 46 மாணவர்களுக்கு இன்ஃபுளூன்ஸா போன்ற நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் 14 வரை, கிந்தா மாவட்ட சுகாதார அலுவலகம் மூலம் அறிகுறிகளுடன் இருந்த 61 மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை, சுகாதார மதிப்பீட்டின் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டதாக பேரா மனிதவளம், சுகாதாரம், இந்திய சமூக விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவின் தலைவர் டத்தோ ஏ. சிவநேசன் தெரிவித்தார்.

இன்ஃபுளூன்ஸா பாதிப்புகளைத் தவிர, 14 மாணவர்களுக்கு மேல் சுவாசக்குழாய் தொற்று இருப்பதும், ஒரு மாணவருக்குக் கண் வெண்படல அழற்சி இருப்பதும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

மேலும் ஆறு மாணவர்களிடமிருந்து ஆய்வக உறுதிப்படுத்தல் சோதனைகளுக்காக தொண்டை சளி மாதிரிகள்  எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 15நிலவரப்படி, பரிசோதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் சீரான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரா மாநில சுகாதாரத் துறை, கிந்தா போலிஸ் துறை மூலம், புதிய நோய்த்தொற்று நிகழ்வுகள் மற்றும் ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் உள்ளிட்ட நிலைமையைத் தொடர்ந்து கண்காணிப்பதுடன், தேவைப்பட்டால் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளையும் வலுப்படுத்தும்.

புதிய முன்னேற்றங்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படும்  என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset