செய்திகள் மலேசியா
தாப்பாவில் 200 சோலார் விளக்கு கம்பங்களை நிறுவ டத்தோஸ்ரீ சரவணன் தனது சொந்த நிதியை ஒதுக்கியுள்ளார்
தாப்பா:
விபத்துகள் அதிகம் நிகழும் பகுதியான, இங்குள்ள சங்காட் தொழிற்பேட்டை முதல் தாப்பா சிறைச்சாலை வரையிலான நான்கு கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில், அடுத்த மாத தொடக்கத்தில் அதிக திறன் கொண்ட 20 எல்இடி சூரிய ஒளி கம்பங்கள் மூலம் ஒளியூட்டப்படும்.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இரவில் மிகவும் இருட்டாக இருப்பதால், இந்த இடத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது ஒரு மூன்றாண்டுத் திட்டம். நிதி ஒதுக்கீடு இல்லை என்றோ, எங்களால் இதைச் செய்ய முடியாது என்றோ நாங்கள் சாக்குப்போக்கு சொல்ல விரும்பவில்லை.
தாப்பாவை ஒளியூட்டுவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஒதுக்கீட்டை நான் பயன்படுத்துகிறேன்.
ஏனெனில் சாலையோர பகுதிகள் இருட்டாகவும், அடிக்கடி விபத்துகள் நிகழவும் செய்கின்றன. .
மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அவர் இன்று இங்குள்ள மகாத்மா காந்தி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் அவர் கூறினார்.
தாப்பா நாடாளுமன்ற அழகுபடுத்தல் ஒளியூட்டல் திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் மூன்று ஆண்டுகளில் படிப்படியாக 200 எல்.ஈ.டி சூரிய ஒளி விளக்குகள் நிறுவப்படும் என டத்தோஸ்ரீ சரவணன் அறிவித்தார்.
முன்னதாக மஇகா துணைத் தலைவருமான அவர், தாப்பா நாடாளுமன்ற அளவிலான இயந்திரங்கள், உபகரணங்கள், அரசு சாரா நிறுவனங்களுக்கான நன்கொடை வழங்கும் விழாவில், மொத்தம் 151,000 ரிங்கிட் மதிப்பிலான உபகரணங்களையும் நிதி நன்கொடைகளையும் வழங்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 4:36 pm
எல்லை தாண்டிய புகைமூட்டம் தொடர்பாக தடுப்பு நடவடிக்கைகள், இராஜதந்திர ஒத்துழைப்பை மலேசியா நாடும்: ஜாஹித்
September 16, 2026, 4:24 pm
ஷீலா கொலை சம்பவம்; குடும்ப வன்முறையை இயல்பாக்க முடியாது: டாக்டர் லிங்கேஸ்வரன்
September 16, 2026, 3:39 pm
பெர்கேசோவின் மெகா i Lindung u திருவிழா: 60,000 பார்வையாளர்களை இலக்காகக் கொண்டுள்ளது
September 16, 2026, 3:37 pm
இளைய தலைமுறையினருக்கான தமிழ்ச் சமய விழா: பத்துமலையில் சிறப்பாக நடைபெற்றது
September 16, 2026, 2:47 pm
மலாக்கா மாநில சட்டமன்றத்தின் கலைப்பு ஆவணத்தில் கையெழுத்திட்டதை அப்துல் ரவுஃப் மறுத்துள்ளார்
September 16, 2026, 2:46 pm
ஈப்போவில் 46 பள்ளி மாணவர்கள் இன்ஃபுளூன்ஸா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்: டத்தோ சிவநேசன்
September 16, 2026, 2:45 pm
நஜிப்பின் பொதுமன்னிப்பு: எனது கருத்துக்களை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் தெரிவித்தேன்: ஹன்னா இயோ
September 16, 2026, 10:52 am
