செய்திகள் மலேசியா
மொஹைதின் மீதான 4 குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட முடிவு குறித்து சட்டத்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்: கோபிந்த் சிங்
கோலாலம்பூர்:
புகாரி ஈக்விட்டி தொடர்பான, முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் மீதான நான்கு குற்றச்சாட்டுகளைத் தொடர வேண்டாம் என்ற முடிவு குறித்து தலைமை சட்டத்துறை தலைவர் டத்தோ துசுகி மொக்தார் விளக்கமளிக்க வேண்டும்.
ஜசெக தலைவர் கோபிந்த் சிங் தியோ இதனை வலியுறுத்தினார்.
மொஹைதின் நான்கு குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கு வழிவகுத்த, குற்றமற்றவர் என விடுவிக்கப்படாமல் விடுவிப்பதற்கான மனு குறித்து துசுகி விரிவான விளக்கம் அளிக்க வேண்டும்.
பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருவதால், வெளிப்படைத்தன்மை மிகவும் முக்கியமானது என்று இலக்கவியல் அமைச்சருமான அவர் கூறினார்.
பொதுமக்களுக்குத் தெளிவான நியாயமும் முழுமையான விளக்கமும் அளிக்கப்படாமல், முக்கியத்துவம் வாய்ந்த தீவிர வழக்குகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டால், சட்டத்துறை தலைவர் மீதான நம்பிக்கையும், ஒட்டுமொத்த குற்றவியல் நீதி அமைப்பின் நேர்மையும் கடுமையாகச் சீர்குலைக்கப்படும்.
யார் மீதாவது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, வழக்குத் தரப்பு அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்து, நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு உறுதியான அடிப்படையைக் கொண்டிருக்கும் என்பதே பொதுவான எதிர்பார்ப்பாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:52 am
40 மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது
September 16, 2026, 10:39 am
இஸ்ரேலுக்கான இராணுவ சரக்குகளுக்கு மலேசியா ஒரு இடைவழிப் பாதையாக இருக்காது: பிரதமர்
September 16, 2026, 10:27 am
ஷீலா கொலை செய்யப்பட்ட வழக்கு: சந்தேக நபர் குழந்தையை அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்
September 16, 2026, 10:23 am
திடீரென அதிகரிக்கும் நெருங்கிய துணைவர் கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்றாகும்
September 16, 2026, 10:19 am
அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள்: குணராஜ்
September 16, 2026, 10:14 am
டத்தோ காந்தன் மறைவு நாட்டுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
September 16, 2026, 1:03 am
