செய்திகள் மலேசியா
திடீரென அதிகரிக்கும் நெருங்கிய துணைவர் கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் பொறாமையும் ஒன்றாகும்
கோலாலம்பூர்:
கடந்த 2017 முதல் ஜூன் மாதம் வரை நாட்டில் நிகழ்ந்த 165 நெருங்கிய துணைவர் கொலைகளில், மொத்தம் 144 கொலைகள் முன் திட்டமிடல் இன்றி திடீரென நிகழ்ந்துள்ளன.
புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் கடுங்குற்றப் புலனாய்வுப் பிரிவு இதனை கூறியது.
இதில் வெறும் 21 வழக்குகளில், அதாவது 12.7 சதவீத வழக்குகளில் மட்டுமே முன் திட்டமிடலின் கூறுகள் இருந்துள்ளது.
நெருங்கிய உறவினர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலான கொலை வழக்குகள், முன் திட்டமிடல் இன்றி தன்னிச்சையாக நிகழ்கின்றன.
கருத்து வேறுபாடுகள், பொறாமை அல்லது வாக்குவாதங்கள் போன்ற மோதல்கள் தீவிரமடைவதால் இந்தச் சம்பவங்கள் பொதுவாக ஏற்படுகின்றன.
இந்த மோதலே இறுதியில் கொலைக்கு வழிவகுக்கிறது என்று புகிட் அமான் கூறுகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை, நாடு தழுவிய அளவில் பதிவான மொத்த 2,644 கொலை வழக்குகளில், நெருங்கிய உறவினர்கள் சம்பந்தப்பட்ட 165 கொலை வழக்குகளை புக்கிட் அமான் பதிவு செய்துள்ளது.
இது மொத்த வழக்குகளில் 6.2 சதவீதத்திற்குச் சமமாகும்.
மொத்த வழக்குகளில், 99 வழக்குகள் திருமணமான தம்பதியினரையும், எட்டு வழக்குகள் முன்னாள் கணவர்கள் தங்கள் முன்னாள் மனைவிகளைக் கொன்றதையும், 58 வழக்குகள் காதலர்களையும் உள்ளடக்கியிருந்தன.
இதற்கான நோக்கங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த புக்கிட் அமான், குடும்பச் சண்டைகள் காரணமாக 51 வழக்குகளும், அதைத் தொடர்ந்து மூன்றாம் நபரால் ஏற்பட்ட பொறாமையின் காரணமாக 45 வழக்குகளும், கருத்து வேறுபாடுகள் காரணமாக 34 வழக்குகளும் பதிவாகியுள்ளதாகக் கூறியது.
கண்டறியப்பட்ட மற்ற நோக்கங்களில், நிதிப் பிரச்சனைகள் காரணமாக 12 வழக்குகளும், போதைப்பொருள் தாக்கத்தால் எட்டு வழக்குகளும், குடிபோதையால் ஆறு வழக்குகளும், உறவு முறிவை ஏற்றுக்கொள்ள முடியாததால் ஏற்பட்ட பொறாமையால் நான்கு வழக்குகளும் அடங்கும் என புக்கிட் அமான் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 16, 2026, 10:52 am
40 மாவட்டங்களில் ஆரோக்கியமற்ற காற்றின் தரம் பதிவாகியுள்ளது
September 16, 2026, 10:48 am
மொஹைதின் மீதான 4 குற்றச்சாட்டுகளைக் கைவிட்ட முடிவு குறித்து சட்டத்துறை தலைவர் விளக்கமளிக்க வேண்டும்: கோபிந்த் சிங்
September 16, 2026, 10:39 am
இஸ்ரேலுக்கான இராணுவ சரக்குகளுக்கு மலேசியா ஒரு இடைவழிப் பாதையாக இருக்காது: பிரதமர்
September 16, 2026, 10:27 am
ஷீலா கொலை செய்யப்பட்ட வழக்கு: சந்தேக நபர் குழந்தையை அண்டை வீட்டாரிடம் ஒப்படைத்துள்ளார்
September 16, 2026, 10:19 am
அரசியல் ரீதியாக வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் மலேசியர்கள்: குணராஜ்
September 16, 2026, 10:14 am
டத்தோ காந்தன் மறைவு நாட்டுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்
September 16, 2026, 1:03 am
