நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டத்தோ காந்தன் மறைவு நாட்டுக்கும் கட்சிக்கும் பேரிழப்பு: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இரங்கல்

கோலாலம்பூர்:

மஇகா தேசிய இளைஞர் பிரிவின் முன்னாள் தலைவரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு முன்னாள் உறுப்பினருமான டத்தோ வி. எல். காந்தன் மறைவு மாபெரும் இழப்பாகும்.

மஇகா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தமது இரங்கல் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் முன்னாள் தேசியத்தலைவர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் சகோதரருமான டத்தோ காந்தன் கட்சிக்கு ஆற்றிய சேவை போற்றுதலுக்குரியதாகும் என்றார்.

1974ஆம் ஆண்டில் முதன் முதலாக சுங்கைவே சட்டமன்றத்திற்கு போட்டியிட்டு வெற்றி பெற்று சிறந்த சேவையை வழங்கினார்.

கட்சியின் இளைஞர் பிரிவின் தலைமை பொறுப்பை ஏற்றப் போது, இசைக்குழுவை ஆரம்பித்து வைத்த பெருமை அவருக்கு உண்டு.

அதுமட்டுமல்லாது
சிலாங்கூர் மாநிலத்திற்கு தைப்பூச பொது விடுமுறை வாங்கிக் கொடுத்தவர் காந்தன் ஆவார் என்கிற வரலாறும் உண்டு.

பத்துமலை குகை கல்லுடைப்பு பிரச்சினை எழுந்தபோது ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்து அதனை தடுத்து நிறுத்த உதவியவர்

சுங்கைவே வாழ் மக்களுக்கு வீட்டுடமையை பெற்றுக் கொடுத்து அங்குள்ள இந்தியர்களுக்கு வாழ்வு கொடுத்த பெருமையும் அவருக்குண்டு.

பூச்சோங்கில் அவரின் பெயரில் தாமான் காந்தன் என்ற பெயரும் அவரின்ஜபுகழை பறைசாற்றும்.

காடுகளில் மறைவாக விளையாடிக் கொண்டிருந்த சிலம்பக் கலைக்கு அரசாங்கத்திடம் பேசி நாடாளுமன்றத்தில் அங்கிகாரம் பெற்றுக் கொடுத்தவர்.

சிலம்பக் கழகத்தின்
முதல் தலைவராகவும் இன்று வரை ஆயுட்காலத் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

சிறந்த வழக்கறிஞராகவும் இருந்து புகழ்பெற்ற வழக்கறிஞர் நிறுவனத்தில் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அவரின் சேவைகள் காலத்தால் என்ளும் நினைவு கூரப்படும் என்பதில் ஐயமில்லை என்று டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset