நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் பல்வேறு அரசியல், சுயநலம் போன்ற காரணங்களால் பகைமை கொள்வதும் நமது பண்பாடு அல்ல: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்: 

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் பல்வேறு அரசியல், சுயநலம் போன்ற காரணங்களால் பகைமை கொள்வதும் நமது பண்பாடு அல்ல.

மலேசிய தின வாழ்த்து செய்தியில் மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை வலியுறுத்தினார்.

கடந்த 1963 செப்டம்பர் 16ஆம் தேதி  மலாயா, சபா, சரவா ஆகிய பகுதிகள் ஒன்றிணைந்து ‘மலேசியா’ எனும் மாபெரும் சக்தியாக உருவெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இது. 

தீபகற்ப மலேசியாவும் போர்னியோ தீவும் கைகோர்த்து, நமது பல்வகைப்பட்ட கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை ஒரே தேசியக் கொடியின் கீழ் ஒருங்கிணைத்த தருணம்.

பன்முகத்தன்மையே நமது மிகப்பெரிய பலம். பல்வேறு இனங்களும் சமயங்களும் இணக்கமாக வாழ்ந்து கட்டியெழுப்பிய இந்த நாட்டில், பரஸ்பர மரியாதையும் அன்பும் மட்டுமே நம்மை என்றும் முன்னோக்கி அழைத்துச் செல்லும்.

ஒரே மலேசியக் குடும்பமாக நமது வேறுபாடுகளைக் கொண்டாடி, நாட்டின் அமைதி, வளர்ச்சி மற்றும் ஒற்றுமையைப் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம்.

மலேசிய தின நல்வாழ்த்துகள்.

வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நாம் பல்வேறு அரசியல் காரணங்களுக்காகவும், தனிநபர் சுயநலத்திற்காகவும் மலேசியர்களின் அடிப்படைக் குணங்களை விட்டுத் தருவதும், பகைமை கொள்வதும் நமது பண்பாடு அல்ல.

இந்த நாடு இன்று வளர்ச்சி அடைந்திருப்பதற்குக் காரணம் மூவின மக்களின் உழைப்பு, ஒற்றுமை விட்டுக் கொடுத்தல் போன்ற நமக்கே உரித்தான சிறப்பம்சங்களே.

எனவே மலேசியர்களாக நாம் ஒற்றுமையாக இருப்போம். தேசியக் கோட்பாட்டை மதித்துக் கடைப்பிடிப்போம். இந்த நாட்டை வளமுடன் நலமுடன் இருக்க வழி வகுப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset