நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலுக்கான இராணுவ சரக்குகளுக்கு மலேசியா ஒரு இடைவழிப் பாதையாக இருக்காது: பிரதமர்

கோலாலம்பூர்:

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்குத் துணைபுரியும் எந்தவொரு சரக்கிற்கும் மலேசியாவை இடைவழிப் பாதையாகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்.

மலேசியாவின் நிலைப்பாட்டை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தினார்.

பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இராணுவ நடவடிக்கை அல்லது ஆக்கிரமிப்பையும் நாடு ஆதரிக்காது என்பதை உறுதி செய்வதில் மலேசியா தனது தெளிவான, உறுதியான நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது.

மலேசியாவின் நிலைப்பாடு தெளிவானது, உறுதியானது.

இஸ்ரேலின் இராணுவத் திறன்களையும், பாலஸ்தீனிய மக்கள், அப்பாவி மக்களின் உயிர்களுக்கு எதிரான அதன் அட்டூழியங்களையும் ஆதரிக்கும் அல்லது அவற்றுக்கு பங்களிக்கும் எந்தவொரு சரக்கு அனுப்புதலுக்கான வழித்தடமாக இந்த நாடு பயன்படுத்தப்படுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

சந்தேகத்திற்கிடமான எந்தவொரு சரக்கு அனுப்பீடும் மலேசிய சட்டத்தின்படி பரிசோதனைக்கும் விசாரணைக்கும் உட்படுத்தப்படும். 

விதிமீறல் ஏற்பட்டால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset