
செய்திகள் இந்தியா
கொரோனா தடுப்பூசி செலுத்த கட்டாயப்படுத்தமாட்டாது: உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு
புது டெல்லி:
இந்தியாவில் உள்ள யாருக்கும் கட்டாயப்படுத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என வழிகாட்டு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசு தெரிவித்துள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுக்கே நேரில் சென்று தடுப்பூசி செலுத்த உத்தரவிடக் கோரி தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு தொடர்பாக விளக்கமளித்து இந்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில்,
உலகிலேயே மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 11ஆம் தேதி நிலவரப்படி 152.95 கோடி தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தகுதியானவர்களில் 90.84 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். 61 சதவீதம் பேர் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
இதுவரை மாற்றுத் திறனாளிகளுக்கு 23,768 தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நபரின் அனுமதியைப் பெறாமல் அவர்களுக்குத் தடுப்பூசி செலுத்துவது தொடர்பான எந்தவித விதிகளும் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்படவில்லை. சூழலைக் கருத்தில்கொண்டு மக்கள் தாமாகவே முன்வந்து செலுத்திக் கொள்ளும் வகையிலேயே தற்போதைய தடுப்பூசி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விருப்பத்துக்கு மாறாக யாருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட மாட்டாது என
அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு மட்டும் ரயில்களில் அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பல்வேறு மாநிலங்களில் விதிக்கப்பட்டுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:06 pm
மியான்மரில் டிரோன் தாக்குதல் நடத்தவில்லை: இந்திய ராணுவம்
July 14, 2025, 7:09 am
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
July 13, 2025, 9:20 pm
டெல்லியில் நடைபாதையில் உறங்கிய ஐவர் மீது பாய்ந்த Audi கார்
July 12, 2025, 4:08 pm
முகத்தில் குத்துவிட்ட எம்எல்ஏ மீது முதல்வர் கூறியபின் போலிசார் வழக்குப் பதிவு
July 12, 2025, 2:10 pm
75 வயதை எட்டியவுடன் மோடி பதவி விலக ஆர்எஸ்எஸ் சூசக அறிவிப்பு
July 11, 2025, 10:02 pm
மாதவிடாய் என்று கூறி ஆடைகளை களைந்து சோதனை: பள்ளி முதல்வர், 4 பேர் கைது
July 11, 2025, 9:51 pm
5 நாடுகளின் பயணத்தை முடித்த மோடி எப்போது மணிப்பூர் செல்வார்: காங்கிரஸ் கேள்வி
July 10, 2025, 8:54 pm