நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழகத்தில் இன்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி: மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

சென்னை,

இந்தியா முழுவதும் பூஸ்டர் ‘டோஸ்’ எனப்படும் 3-ஆவது தவணை  கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டிலும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் ‘டோஸ்’ தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளது.

முதல் கட்டமாக முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்களுக்கு பூஸ்டர் செலுத்தும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.

Corona Precaution Dose: Tamil Nadu To Administer 4 Lakh 'Precaution Doses'  On Monday

பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள ‘இமேஜ்’ கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி 273 நாட்கள் (கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் மே 3-ந்தேதி வரை) முடிந்தவர்களில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய்கள் உடையவர்கள் என 10 லட்சத்து 75 ஆயிரத்து 351 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். இவர்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியானவர்கள் என தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. 

இதனை தொடர்ந்து மாநிலம் முழுவதும் முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்பதிவு எதுவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset