நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

Molnupiravir மாத்திரை பக்க விளைவுகளை உண்டாக்குகிறது: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன்

சென்னை:

மோல்னுபிரவிர் (Molnupiravir) கொரோனா தொற்று லேசாக இருப்பவர்களுக்கு இதனை வழங்கும் போது 3% மட்டுமே நோய் தீவிரமாகாமல் காப்பதுடன், கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த மாத்திரை பாதிக்கும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த மாத்திரை பக்க விளைவுகளை ஏற்படுத்துவதால் கொரோனா சிகிச்சைக்கு அதனை பயன்படுத்த முடியாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளதாக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

மோல்னுபிரவிர் என்ற மாத்திரையை கொரோனா நோயாளிகளுக்கு அவசர கால தேவைக்கு பயன்படுத்த அண்மையில் மத்திய அரசு அவசரமாக அனுமதி வழங்கியது. 

E.Theranirajan MRCPCH (uk)FRCPCH(uK) on Twitter: "Patient who had recovered  from corona donated 1 lakh through his uncle https://t.co/OxgOjuClGO" /  Twitter

தேரணி ராஜன்

இதனையடுத்து கடந்த வாரம் இந்த மாத்திரை சந்தைக்கு வந்த நிலையில், வெறும் 1433 நோயாளிகளிடம் மட்டுமே இது பரிசோதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்று லேசாக இருப்பவர்களுக்கு இதனை வழங்கும் போது 3% மட்டுமே நோய் தீவிரமாகாமல் காத்துள்ளது தெரிவந்தது. 

இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் கருவில் இருக்கும் குழந்தையைக் கூட இந்த மாத்திரை பாதிக்கும் என்பதுதான். 

இதனால் மோல்னுபிரவிரை சிகிச்சை பட்டியலில் வைத்துக் கொள்ள முடியாது என கொரோனா task force முடிவு செய்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்தார்.

இதுகுறித்து நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன், தமிழகத்தில் மோல்னுபிரவிர் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்துவதில் நன்மை இல்லை என்றார். 

மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டால், அதனை பயன்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கேட்டுக் கொண்டார்.

Government Not Considering The Use Of Oral Antiviral Drug, Molnupiravir, At  This Time – IzzSo – News travels fast !!

இதனிடையே மோல்னுபிரவிர் மருந்து சந்தையில் இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யப்படுவதில்லை என தமிழ்நாடு மருந்து கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் இந்த மோல்னுபிரவிர் மாத்திரையை சந்தைபடுத்துவதற்கு தற்காலிக தடை விதித்தால் மக்கள் இன்னும் பாதுகாப்புடன் இருக்க முடியும் என்பதே மருத்துவர்கள் மற்றும் மருந்தக உரிமையாளர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset