நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நோன்பு திறப்பு நிகழ்ச்சிகள் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஆழமான பிணைப்பையும் வலுப்படுத்துகின்றன: சிங்கப்பூர் சட்ட அமைச்சர் முரளி பிள்ளை

சிங்கப்பூர்:

புனித ரமலான் மாதத்தில் சமூக நன்மைக்காகச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை போன்ற அமைப்புகள் ஒன்றுசேர்ந்து தொண்டூழியர்களை ஈடுபடுத்துவது பாராட்டத்தக்கது என சிங்கப்பூர் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை நடத்திய ‘நல்லிணக்க நோன்பு திறப்பு’ நிகழ்ச்சியின்போது முரளி அவ்வாறு கூறினார். 

மறுவாழ்வை நாடும் சிறைக்கைதிகளுக்குப் பயனளிக்கும் திட்டத்தை அப்துல் கஃபூர் பள்ளிவாசல் ஏற்று நடத்துவதையும் அவர் குறிப்பிட்டார். 

“இத்தகைய நிகழ்ச்சிகள் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஆழமான பிணைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருகின்றன. இது நம் நாட்டின் சமூகக் கட்டமைப்பை மேலும் வலுவாக்குகிறது,” என்று முரளி குறிப்பிட்டார். 

சென்ட்ரியம் ஸ்குவேரில் உள்ள ‘டி வில்லா’ மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) மாலை இந்நிகழ்ச்சி நடைபெற்றது. சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் சமூகங்களுக்கு இடையிலான புரிந்துணர்வையும் ஆழமான பிணைப்பையும் தொடர்ந்து வலுப்படுத்தி வருவதாகத் முரளி பிள்ளை பாராட்டினார்.

நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் கூட்டு முயற்சி
30 ஆண்டுகளுக்குமுன் ஆறு அமைப்புகளுடன் தொடங்கி, தற்போது 18 அமைப்புகள் கொண்ட பேரவையாகச் சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை உருவெடுத்துள்ளது.

சிங்கப்பூர் இந்திய முஸ்லிம் பேரவை ஆண்டுதோறும் முன்னெடுத்துவரும் பல்வேறு சமய நல்லிணக்க முயற்சிகளில், இந்த நல்லிணக்க இஃப்தாரும் ஒன்று என்று பேரவையின் தலைவர் அ. முஹம்மது பிலால் தெரிவித்தார்.

“சிங்கப்பூரின் சட்டங்களும் கட்டமைப்பும் நல்லிணக்கத்தை வளர்க்கும் நோக்கிலேயே அமைந்துள்ளன. நல்லிணக்கத்தை நாம் என்றென்றும் பேணிக்காக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

“இதுபோன்ற இஃப்தார் நிகழ்வில் அனைத்து இனத்தவர்களும் கலந்துகொள்வது சிங்கப்பூரின் தனிச் சிறப்பு,” என்று சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாக அதிகாரி அன்பரசு ராஜேந்திரன் கூறினார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset