நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது.

சீ விளையாட்டுப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் கபடிப் போட்டியில் பங்கேற்ற மலேசிய அணியினர் கடுமையான சவால்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக போட்டிக்கு செல்வதில் நிதிப் பிரச்சினையும் அவ்வணி எதிர்கொண்டது.

இருந்தாலும் இப்போட்டியின் சவால்களை எதிர்கொண்ட மலேசிய அணியினர் இரு வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.

ஆண், பெண் இரு பிரிவிலும் மலேசிய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

தங்கப்பதக்க இலக்குடன் மலேசிய அணியினர் இப்போட்டியில் களமிறங்கினர்.

இருப்பினும் மற்ற நாடுகளின் சவால்களுக்கும் மத்தியில் மலேசிய அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது.

இனி அடுத்தடுத்த போட்டிகளில் பங்கேற்க மலேசிய அணி தொடர்ந்து போராடும் என்று மலேசிய கபடிச் சங்கத்தின் தலைவர் பீட்டர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset