நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின்  பியெர்லி தான் - எம். தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது.

சீ விளையாட்டுப் போட்டி பேங்காக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் மகளிருக்கான பூப்பந்து இரட்டையர் பிரிவின்  உலகின் 2ஆவது இடத்தில் உள்ள ஜோடியான பியெர்லி தான் - தீனா ஜோடி,  முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா - மெய்லிசா ட்ரியாஸ் ஜோடியுடன் மோதியது.

சுமார்  85 நிமிடங்கள் நீடித்த ஒரு கடுமையான போட்டியில் 21-16, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடி வெற்றி பெற்றது.

இதன் மூலம் பியெர்லி தான் - தீனா ஜோடி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சீ விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் பூப்பந்து இரட்டையர் பிரிவில் மலேசியாவின் 10 ஆண்டுகால தங்கப் பதக்க வறட்சியை இந்த வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டு வந்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset