நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது

கொல்கத்தா:

சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, லியோனல் மெஸ்ஸியின் இந்திய பயண ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கொல்கத்தா போலிசார் கைது செய்தனர்.

அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 14 ஆண்டுகளுக்கு பிறகு இன்று இந்தியா வந்தார்.

கொல்கத்தாவில் சால்ட் லேக் அரங்கிற்கு காலை 11.15 மணியளவில் மெஸ்ஸி சென்றார்.

அரங்கிற்கு வந்த மெஸ்ஸி, ரசிகர்களின் அடாத செயலால் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் மெஸ்ஸியை சுற்றி இருந்ததால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை பார்க்க முடியவில்லை.

இதனால் சால்ட் லேக் அரங்கத்தில் குழப்பம் ஏற்பட்டது.

டிக்கெட்டுகளை திரும்பப் பெறுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அரங்கில் இருந்த அனைத்து
பொருட்களையும் ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.

தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு வசதிகள் செய்யாததற்கு மெஸ்ஸி ரசிகர்களிடம் முதல்வர் மம்தா மன்னிப்பு கோரியுள்ளார்.

இந்நிலையில், மெஸ்ஸியின் இந்திய பயண நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சதத்ரு தத்தாவை கொல்கத்தா போலிசார் கைது செய்தனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset