நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு

கொல்கத்தா:

கொல்கத்தாவில் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார்.

கோட் டூர் ஆஃப் இந்தியா எனும் திட்டத்தின்படி அர்ஜெண்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து, கொல்கத்தாவின் லேக் டவுன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனது 70 அடி உயர சிலையை மெஸ்ஸி காணொலி வாயிலாகத் இன்று திறந்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், லேக் டவுன் திடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அவரது இளைய மகன் அப்ராம் ஆகியோர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நேரில் சந்தித்துள்ளனர்.

இந்தச் சந்திப்பில், அவர்கள் மூவரும் கைகுலுக்கி உரையாடியதோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

.இந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset