நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ போட்டியின் கராத்தே பிரிவில் தேவேந்திரன், ஷாமலா ராணி தங்கப்பதக்கம் வென்றனர்

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவுக்கு மேலும் இரண்டு தங்கப்பதக்கங்களை கராத்தே அணி வென்று தந்தது.

சீ விளையாட்டுப் போட்டி தாய்லாந்து பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் கராத்தே போட்டியின் மூலம், மலேசியா தனது தங்கப்பதக்க எண்ணிக்கையை இன்று அதிகரித்துள்ளது.

55 கிலோகிராம் வயதுக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்ட தேவேந்திரன் கல்யானா சுந்தரம், வியட்நாம் வீரர் சூ வான் டக்கை  வீழ்த்தினார்.

இதில் தேவேந்திரன் போட்டியை 4-0 என்ற கணக்கில் வெற்றிகரமாக முடித்தார்.

இதன் மூலம் மலேசிய அணியின் தங்கப்பதக்க சேகரிப்பில் அதிகரிப்பு ஏற்பட்டது.

50 கிலோவுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், சி. ஷாமலா ராணி மியான்மரைச் சேர்ந்த தனது எதிராளியான ஃப்ளோரன்ஸ் நெய் சி ஹுடுனை தோற்கடித்து தேசிய அணிக்கு தங்கப் பதக்கத்தையும் உறுதி செய்தார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset