நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனை - பயணிகள் மூன்றரை மணிக்கு முன்னதாக வரும்படி அறிவிப்பு

சென்னை:

செங்​கோட்டை அருகே நேற்று முன்​தினம் இரவு நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்​பவம் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யது. இதையடுத்து நாடு முழு​வதும், பொது​மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பாது​காப்பு அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. அதன்​படி, சென்னை விமான நிலை​யத்​தில் வழக்​க​மாக இருக்​கும் 3 அடுக்கு பாது​காப்பு முறை, 5 அடுக்கு பாது​காப்​பாக அதிகரிக்கப்பட்டுள்​ளது.

விமான நிலைய பாது​காப்பு அதி​காரிகள், வெடிகுண்டு நிபுணர்​கள், அதிரடிப்​படை வீரர்​கள், விமான நிலை​யத்​தின் அனைத்து பகு​தி​களி​லும் தீவிர ரோந்து வந்​து, பாது​காப்​புப் பணி​களில் ஈடு​படு​கின்​றனர். 

விமான நிலை​யத்​துக்கு வரும் கார்​கள் அனைத்​தும், வெடி குண்டு நிபுணர்​கள், மோப்ப நாய் உதவி​யுடன் சோதனை செய்​யப்​படு​கின்​றன.
 
விமானப் பயணி​களுக்கு வழக்​க​மான சோதனை​களு​டன், பயணி​கள் விமானங்​களில் ஏறும் இடத்​தில், மீண்​டும் ஒரு​முறை, அவர்​களு​டைய கைப்பை உட்பட அனைத்​தையும் தீவிர​மாக சோதிக்​கின்​றனர். 

பயணி​கள் கையில் எடுத்​துச் செல்​லும் லக்​கேஜில், கத்திரிக்​கோல், ரேசர் பிளேடு, ஊசிகள், கயிறு, இன்​சுலேசன் டேப், வாக்​கிங் ஸ்டிக், கோடாரி போன்ற கூர்​மை​யான ஆயுதங்​கள், ஊறு​காய் பாட்​டில் உள்​ளிட்​ட​வற்றை எடுத்​துச் செல்ல தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய தொழில் பாது​காப்​புப் படை​யினர், அனை​வருக்​கும் விடு​முறை​ ரத்து செய்​யப்​பட்​டு, உடனடி​யாக பணிக்கு திரும்​ப உத்​தர​விடப்​பட்​டுள்​ளதோடு, அவர்​களின் பணி நேர​மும் 12 மணிநேர​மாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது. 

சென்னை விமான நிலை​யத்​தில் பயணி​களுக்கு கூடு​தல் சோதனை​கள் நடத்​தப்​படு​வ​தால், உள்​நாட்டு பயணி​கள் ஒன்​றரை மணி நேரம், சர்​வ​தேச பயணி​கள் மூன்றரை மணி நேரத்​துக்கு முன்​ன​தாகவே வரு​மாறு விமான நிறு​வனங்​கள் அறி​வுறுத்​தி​யுள்​ளன. 

விமானங்​களில் பார்​சல்​ ஏற்​றும் இடங்கள், விமானங்​களுக்கு எரிபொருள் நிரப்​பும் இடங்​களில் கூடு​தல் கண்​காணிப்​பு​ மேற்​கொள்​ளப்​படு​கிறது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset