செய்திகள் தமிழ் தொடர்புகள்
பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
சென்னை:
பீகாரின் இந்தியா கூட்டணி முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்-க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூக நீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்து, மில்லியன் கணக்கான மக்களிடையே நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள் என தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளார்.
இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கியத் தலைவரும், பீகாரின் எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவ் தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பீகார் சட்டமன்றத் தேர்தலின் இறுதிக்கட்டப் பிரச்சாரங்களுக்கு மத்தியில் அவரது பிறந்தநாள் வந்துள்ளதால், இந்த நிகழ்வு மிகுந்த அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தேஜஸ்வி யாதவின் பிறந்தநாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "அன்புள்ள சகோதரர் தேஜஸ்வி யாதவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பீகாரில் புதுப்பிக்கப்பட்ட சமூகநீதி இயக்கத்தின் உந்து சக்தியாக நீங்கள் உருவெடுத்துள்ளீர்கள், இலட்சக்கணக்கான மக்கள் மத்தியில் நம்பிக்கையைத் தூண்டியுள்ளீர்கள்.
உங்கள் தலைமையில் பீகார் ஒரு புதிய அத்தியாயத்தின் விளிம்பில் நிற்கும் வேளையில், சமத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் கண்ணியம் ஆகியவற்றின் குறிக்கோள்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தக் வரலாற்றுச் சிறப்புமிக்கப் பாதையில் தொடர்ந்து செல்ல உங்களுக்கு வலிமை, நல்ல ஆரோக்கியம் மற்றும் தைரியம் கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 20, 2026, 7:19 pm
தருமபுரி அருகே குன்று சரிந்து ரயில் மீது மோதிய பாறை: பயணிகள் உயிர் தப்பினர்
September 16, 2026, 7:27 pm
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது: 5 முனைப் போட்டி
September 16, 2026, 2:01 pm
அன்பில் மகேஸ் வீட்டில் நடக்கும் சோதனை திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் சாடல்
September 15, 2026, 10:11 pm
மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக் குறைவு: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு
September 14, 2026, 11:38 pm
லண்டனில் முதல்வர் விஜய் முன்னிலையில் 3 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
September 14, 2026, 6:34 pm
சென்னை விமான நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக ரூ.23 கோடியில் அமைக்கப்பட்ட பிக்கப் பாயின்ட் பிளாசா
September 13, 2026, 9:21 pm
மொரியஷியஸில் நடைபெறும் 13-ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாட்டில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பங்கேற்பு
September 13, 2026, 6:16 pm
இடைத்தேர்தல்: அதிமுக பிரச்சாரக் குழுவில் எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் அணிக்கு இடமில்லை
September 13, 2026, 6:08 pm
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக இடதுசாரிகள் அறிவித்தனர்
September 12, 2026, 10:57 pm
