செய்திகள் தமிழ் தொடர்புகள்
பெண்களுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை
சென்னை:
பெண்கள், குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதியாகவும், பெண்களுக்குத் தனியாகத் தொழில் வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடனும் அரசு மானியத்துடன் இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும் என்று திட்ட விதிமுறைகள் தெளிவாகக் கூறுகின்றன. இருப்பினும், இந்த ஆட்டோக்களை ஆண்கள் இயக்குவதாகச் சமூக நலத்துறை அதிகாரிகளுக்குப் புகார்கள் வரப்பெற்றன.
இதையடுத்து பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். "தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளின்படி, மானிய உதவியுடன் வழங்கப்பட்ட இளஞ்சிவப்பு ஆட்டோக்களைப் பெண்கள் மட்டுமே இயக்க வேண்டும்.
விதிகள் பலமுறை எடுத்துரைக்கப்பட்ட பிறகும், தொடர்ந்து ஆண்கள் இந்த ஆட்டோக்களை இயக்குவது கண்டறியப்பட்டால், அந்த ஆட்டோக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 8, 2025, 9:14 pm
3,665 காவலர் பணியிடங்களுக்கு 2.25 லட்சம் இளைஞர்கள் தயாராகி வருகின்றனர்
November 5, 2025, 5:08 pm
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
November 4, 2025, 5:04 pm
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவர் கைது
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
