நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதி​முக-வை கரகாட்​டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி; எஸ்ஐஆரை எதிர்த்தால் இரட்டை இலையை முடக்கிவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின் 

வேலூர்:

எஸ்​ஐஆரை எதிர்த்​தால் இரட்டை இலையை முடக்கி விடு​வார்​கள் என்று அதி​முக​வுக்கு பயம் என திமுக நிர்​வாகி​கள் கூட்​டத்​தில் உதயநிதி ஸ்டா​லின் தெரி​வித்​தார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி அடுத்த சேவூரில் திமுக நிர்​வாகி​கள் கூட்​டம் நடை​பெற்​றது. இதில் திமுக இளைஞரணி செய​லா​ள​ரும், துணை முதல்​வ​ரு​மான உதயநிதி ஸ்டா​லின் பேசும்​போது, ‘‘இங்​கு, மாவட்​டச் செய​லா​ளர் பேசுகை​யில், என்னை கைராசிக்​காரர் என்​றார். அதில், சின்​னத் திருத்​தம்​... எனக்கு ராசிகளில் நம்​பிக்கை இல்​லை. அதி​லும் கைராசி​யில் நம்​பிக்கை இல்​லை. ஆனால் கை மீது நம்​பிக்கை இருக்​கிறது. அதாவது உங்​கள் உழைப்​பின் மீது இருக்​கிறது. வேறு எந்​தக் கையும் இல்​லை.

நாம் 75-வது ஆண்டை நிறைவு செய்து 76-வது ஆண்​டில் சென்று கொண்​டிருக்​கி​றோம். இந்த, 75 ஆண்​டு​களில் எத்​தனையோ சவால்​கள், துரோகங்​களை திமுக சந்​தித்​துள்​ளது. அவை அனைத்​தை​யும் வெற்​றி​கொண்டு கருப்​பு, சிவப்பு கொடி கம்​பீர​மாகப் பறப்​ப​தற்கு நீங்​கள்​தான் காரணம். தான் சந்​தித்த அனைத்​துத் தேர்​தல்​களி​லும் வெற்​றி​பெற்ற ஒரே தலை​வர் உலகத்​திலேயே கருணாநிதி மட்​டும் தான். அவரைப் போல் நமது தலை​வ​ரும் தான் தலை​வ​ராகி சந்​தித்த அத்​தனை தேர்​தல்​களி​லும் வெற்றி பெற்​றுள்​ளார். அதற்​கும் உங்​கள் உழைப்​பு​தான் காரணம்.

பிரதமர் மோடி, பிஹார் தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் சம்​பந்​தமே இல்​லாமல் தமிழ்​நாட்​டைப் பற்றி பேசுகி​றார். தமிழ்​நாட்​டில் பிஹார் மக்​களுக்கு பாது​காப்பு இல்​லை; அங்கே அவர்​களை துன்​புறுத்து கிறார்​கள் என்று பேசுகி​றார். தான் இந்​திய ஒன்​றி​யத்​துக்கே பிரதமர் என்​பதை மறந்து மக்​களுக்​குள், மாநிலங்​களுக்​குள் சண்​டையை மூட்​டி​விட முயற்​சிக்​கி​றார். இப்​படித்​தான் ஒடிஷா தேர்​தலின் போது, கோயில் சாவியை திருடி​விட்டு தமிழ்​நாட்​டுக்கு வந்​து​விட்​டார்​கள் என்று சொன்​னார். பிரதமரின் இத்​தகைய வெறுப்​புப் பேச்​சுக்கு முதல்​வர் கண்​டனம் தெரி​வித்​தார். இதற்​குக்​கூட கண்​டனம் தெரிவிக்​காமல் எதிர்க்​கட்சி தலை​வர் எடப்​பாடி பழனி​சாமி இருக்​கி​றார்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தத்​துக்கு அனை​வ​ரும் எதிர்ப்பு தெரி​வித்​தா​லும் நாங்​கள் பாஜக-வை ஆதரிப்​போம் என்று கூறும் ஒரே இயக்​கம் அதி​முக தான். இது தமிழ்​நாட்​டுக்கு செய்​யும் மிகப்​பெரிய துரோகம். இதை எல்​லாம் மக்​களிடம் நாம் கொண்டு செல்ல வேண்​டும். எஸ்​ஐஆரை எதிர்த்​தால் இரட்டை இலையை முடக்கி விடு​வார்​கள் என்று அதி​முக-வுக்​குப் பயம். பழனி​சாமிக்கு தெரிந்​ததெல்​லாம் ஒன்​று, காலில் விழு​வது, இன்​னொன்​று, அடுத்​தவர் காலை வாரி விடு​வது. தமிழ்​நாட்டை காப்​பாற்​றப் போவ​தாகச் சொல்லி பஸ்ஸை எடுத்​துக்​கொண்டு புறப்​பட்​ட​போதே சொன்​னேன், போகப்​போக ஒவ்​வொரு​வ​ராக இறங்​கி​விடு​வார்​கள். கடைசி​யில் நீங்​களும் டிரைவ​ரும்​தான் இருப்​பீர்​கள் என்​று. அது​தான் இன்று நடக்​கிறது. ஒரு நாள், பழனி​சாமியை நீக்​கி​விட்​ட​தாக அவரே அறிக்கை விடு​வார்.

அதி​முக-வை கரகாட்​டக்காரன் கார் போல ஆக்கிவிட்டார் பழனிசாமி. ஆக்சிடென்ட் ஆன கார் மாதிரித்தான் இன்று அதிமுக நிலைமை இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை எல்லாம் திமுகவின் பி டீம் எனச் சொல்லி​விட்டார் பழனிசாமி. நான் சொல்கிறேன், தொண்டர்​களாகிய நீங்கள் இருக்கும் வரை திமுக-வுக்கு பி டீமும் தேவையில்லை, சி டீமும் தேவையில்லை” என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset