செய்திகள் தமிழ் தொடர்புகள்
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
சென்னை:
கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் இன்று உயர்ந்துள்ளது. இன்று காலை கல்லறைத் திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
வியாபாரமும் சுறுசுறுப்பாக நடைபெற்றுவருவதால் விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று ஒரு கிலோ மல்லி 900 ரூபாயில் இருந்து 1,200க்கும் ஐஸ் மல்லி 600 ரூபாயில் இருந்து 800க்கும் ஜாதிமல்லி மற்றும் முல்லை 300ல் இருந்து 400க்கும் கனகாம்பரம் 300ல் இருந்து 2,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதுபோல், அரளி பூ 100 ரூபாயில் இருந்து 300க்கும் சாமந்தி 100ல் இருந்து 200க்கும் சம்பங்கி 80ல் இருந்து 200க்கும் பன்னீர் ரோஸ் 60ல் இருந்து 160 க்கும் சாக்லேட் ரோஸ் 80ல் இருந்து 200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’இன்று கல்லறை திருநாள் என்பதாலும் நாளை முகூர்த்த நாள் என்பதாலும் பூக்களை வாங்குவதற்கு பொதுமக்களின் கூட்டம் அலைமோதுகிறது.
இதனால் அனைத்து பூக்களின் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறுவதால் விவசாயிகள், வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
