நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

நீட் தேர்வுக்கு விலக்குகோரி திமுக எம்பி மாநிலங்களவையில் மசோதா தாக்கல்

புது டெல்லி:  

தமிழகத்தில்  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் தனிநபர் மசோதா தாக்கல் செய்துள்ளார்.

பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் வகையில்,  நீட் தேர்வு 2016இல் கொண்டு வரப்பட்டது. 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த நீட் தேர்வால், கடந்த 4 ஆண்டுகளில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், இது குறித்து மாநிலங்களவையில் நீட் தேர்வு விலக்கு தொடர்பான தனி நபர் மசோதா தாக்கல் செய்துள்ளேன்.

NEET 2021 exam date ANNOUNCED! NTA to conduct medical entrance Test on  August 1—check how to apply, required documents, exam pattern and more here  | Zee Business

அப்போது, 70 ஆண்டுகளில் தமிழகம் கண்ட சுகாதார வளர்ச்சி குறித்தும் எடுத்துரைத்தேன். தமிழக அரசும் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றினாலும் அதை தமிழக ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ஒருவர் கூட மருத்துவர் ஆகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் ஒன்றிய அரசு உள்ளது.

அதே போல, 71ஆண்டுகள் கனவாக உள்ளது உச்சநீதிமன்றக் கிளைகளை தென் மாநிலங்களில் அமைக்கவும் தனிநபர் மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்றார் வில்சன்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset