நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ரொனால்டோ 800 கோல்கள்

லண்டன்:

முதல் தர கால்பந்து போட்டிகளில் 800 கோல் என்ற சாதனை மைல்கல்லை கடந்த முதல் வீரர் என்ற பெருமை போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு (36 வயது) கிடைத்துள்ளது. 

தற்போது மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ, ஆர்செனல் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் 2 கோல் அடித்து அசத்தினார். 

அந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைட்டட் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இந்த 2 கோல் சேர்த்து அவரது மொத்த கோல் எண்ணிக்கை 801 ஆக உள்ளது.

Cristiano Ronaldo breaks 800-goal barrier - Taipei Times

மான்செஸ்டர் யுனைட்டட் அணிக்காக 130 கோல், ரியல் மாட்ரிட் அணிக்காக 450, ஜுவென்டஸ் அணிக்காக 101, ஸ்போர்டிங் லிஸ்பன் அணிக்காக 5 மற்றும் போர்ச்சுகல் தேசிய அணிக்காக 115 கோல் அடித்துள்ளார். 

பீலே (769), ரொமாரியோ, பெரன்க் புஸ்காஸ் (தலா 761), லியோனல் மெஸ்ஸி (756) ஆகியோர் அடுத்த இடங்களில் உள்ளனர். புதிய சாதனை மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ள ரொனால்டோவுக்கு கால்பந்து பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset