நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன: தமிழக சுகாதாரத்துறை 

சென்னை:
 
ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை மற்றும் கிங்ஸ் இன்ஸ்டிடியூட் மருத்துவமனைகளிலும் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்ததன் காரணமாக மருத்துவமனைகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த கூடுதல் படுக்கை வசதிகள் குறைக்கப்பட்டிருந்தன.

ஒமிக்ரான் வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தும் பணிகள் இப்போது விரைவாக தொடங்கியுள்ளன.

இந்நிலையில், ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதையடுத்து பன்னாட்டு விமானநிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிலிருந்து கர்நாடகா வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து தமிழ்நாட்டில், கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தற்போது கூடுதல் படுக்கை வசதிகள் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 

மேலும் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் கூடுதலாக 150 படுக்கைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset