செய்திகள் தமிழ் தொடர்புகள்
இருமல் மருந்தால் பறிபோன 10 குழந்தைகளின் உயிர்: மருத்துவர் கைது
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் இருமல் சிரப் உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்ததாக வந்த புகாரைத் தொடர்ந்து, அந்த மருந்தை பரிந்துரைத்த சிந்த்வாரா பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிஎன்எஸ் சட்டப்பிரிவு 105, 276 மருந்துகள், காஸ்மெடிக்ஸ் சட்டப்பிரிவு 27 ஆகியனவற்றின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த மருத்துவரிடம் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகத் தெரிகிறது.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் ஒன்பது குழந்தைகள், மகாராஷ்டிராவில் இரண்டு குழந்தைகள் மற்றும் ராஜஸ்தானில் ஒரு குழந்தை என 12 குழந்தைகள் இருமல் சிரப் உட்கொண்டதால் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் பார்மாவில் இந்த கோல்ட்ரிஃப் இருமல் சிரப் உற்பத்தி செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்: இதற்கிடையில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் தயாரான இருமல் மருந்தை சாப்பிட்ட குழந்தைகள் வடமாநிலத்தில் உயிரிழந்துள்ளது தொடர்பாக குறித்து டிரக் கண்ட்ரோல் அலுவலரிடம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் தற்போது விசாரணை செய்து வருகிறார். விசாரணை முடிந்த பின்னர் இது குறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும்.
தமிழ்நாட்டில் அந்த வகை இருமல் மருந்து விற்பனையாகி வருகிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காலாவதியான மருந்தை உட்கொண்டதால் குழந்தைகள் உயிரிழந்திருக்கலாம் என்கிற ரீதியிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கோல்ட்ரிப் இருமல் மருந்தை குழந்தைகளுக்கு பயன்படுத்த வேண்டாம்.” என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
