நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

இலங்கையில் தமிழ் செய்தியாளர் மீது ராணுவத்தினர் கொடூர தாக்குதல்

கொழும்பு:

இலங்கை இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி குறித்து செய்தி சேகரிக்க முயன்ற தமிழ் செய்தியாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் மீது அந்த நாட்டு ராணுவத்தினர் கொடூரமாகத் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு ஊடகவியலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து இலங்கை ஊடகவியலாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (எம்எம்இடியு) வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்டப் போரின் நினைவு தின நிகழ்ச்சிகள், முல்லைத் தீவில் கடந்த மாதம் 28ஆம் தேதி நடத்தப்பட்டது.

இதுகுறித்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் விஸ்வலிங்கம் விஸ்வசந்திரன் ராணுவத்தினரால் மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பகுதியின் பெயர்ப் பலகையை அவர் படமெடுத்துக்கொண்டிருந்தபோது, அவரை ராணுவத்தினர் முள் கம்பி சுற்றப்பட்ட பனை மட்டையால் தாக்கினர்.

அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ள ராணுவ வீரர்கள் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தமிழர் பகுதிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள் ராணுவத்தினரால் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே விஸ்வலிங்கம் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset