நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டார்

கோலாலம்பூர்:

தேசிய தலைமை கராத்தே பயிற்சியாளராக ஷர்மேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனை மக்காவ் எனப்படும் மலேசிய கராத்தே கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முன்னாள் தேசிய தடகள வீரர் ஆர். ஷர்மேந்திரனை தேசிய கராத்தே அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாண்டு இறுதியில் தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களை அடைவது அவரின் முக்கிய இலக்காகும்.

இந்த இலக்கை அடைய கேபிஐ எனும் முக்கிய செயல்திறன் குறிகாட்டியுடன் செயல்பட வேண்டும் என மக்காவின் ஏற்பாட்டுக் குழுவின் தலைவரான டத்தோ நூர் அஸ்மி அகமது கூறினார்.

தேசிய பயிற்சியாளராக ஷர்மேந்திரனின் முதல் பணி வரும் அக்டோபர் 3 முதல் 5 வரை நீலாய்  அரங்கில் நடைபெறும் மக்காவ் கராத்தே சாம்பியன் போட்டியுடன் தொடங்கவுள்ளது.

இந்த சாம்பியன் போட்டி குமித்தே, கட்டா போட்டிகளில் உலகின் முதன்மை விளையாட்டு வீரர்களை ஒன்றிணைக்கும்

மேலும் மலேசியாவில் இருந்து மொத்தம் 35 விளையாட்டு வீரர்களை களமிறக்குவார்கள்.

உயர் மட்ட போட்டி காரணமாக எந்த பதக்க இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆனால் சீ விளையாட்டு, ஆசிய விளையாட்டுகளுக்கான தேர்வுக் களமாக இருப்பதோடு, தேசிய அணியின் தற்போதைய திறன்களை மதிப்பிடுவதற்கான சிறந்த தளமாகவும் இது கருதப்படுகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset