நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரேசிலை வீழ்த்திய பொலிவியா: உலகக் கிண்ண வாய்ப்பு தக்கவைப்பு

ரியோ டி ஜெனிரோ:

முன்னாள் உலக சாம்பியன் அணியான பிரேசிலை பொலிவியா அணி 1-0 என வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் பொலிவியா அணி தனது உலகக் கிண்ண போட்டிக்கான வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

பிபா உலகக் கிண்ண 2026ஆம் ஆண்டுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

தென் அமெரிக்க தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பிரேசிலை தன் சொந்த மண்ணில் பொலிவியா சந்தித்தது.

இந்தப் போட்டியில் பொலிவிய அணி வீரர் மியூகெல் டெர்செரோஸ் 45ஆவது நிமிடத்தில் பெனால்டி வாயிலாக ஒரு கோல் அடித்தார்.

ஐந்து முறை உலகக் கிண்ணத்தை வென்ற பிரேசில் அணி இந்தப் போட்டியில் ஒரு கோல் கூட அடிக்கவில்லை என்பது அந்த நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இறுதியில் பொலிவியா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் 2019க்குப் பிறகு சொந்த மண்ணில் பிரேசிலை முதல் முறையாக பொலிவியா வீழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset