
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு: 403 நட்சத்திர ஆமைகள் மலேசியாவுக்கு கடத்த முயற்சி
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 403 இந்திய நட்சத்திர ஆமைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக 2 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், டோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அனைத்துலக நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பயணிகள் ட்ராலி பேக்கில் 403 இந்திய நட்சத்திர ஆமைகளை கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த இருவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் திருச்சி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 21, 2025, 2:28 pm
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் அன்வர் ராஜா: திமுகவில் இணைந்தார்
July 20, 2025, 3:43 pm
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல: எடப்பாடி பழனிசாமி சூளுரை
July 19, 2025, 9:20 pm
கொடைக்கானலில் சட்டவிரோத தங்கும் விடுதிகள்: புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்
July 19, 2025, 2:35 pm
கலைஞரின் கலையுலக வாரிசான மு.க.முத்து மரணம்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm